முகப்புகோலிவுட்

இறுதிக்கட்டத்தில் ஜி.வி.பிரகாஷின் ‘ஐங்கரன்’

  | January 05, 2018 15:09 IST
Ayngaran Movie

துனுக்குகள்

  • ஜி.வி.பிரகாஷுக்கு ஜோடியாக ‘சாட்டை’ புகழ் மகிமா நம்பியார் நடிக்கிறார்
  • இதன் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்ஸ் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது
  • இன்னும் 4 நாட்களில் மொத்த ஷூட்டிங்கும் நிறைவடையவுள்ளதாம்
'புரூஸ் லீ' படத்திற்கு பிறகு ஹீரோவாக ஜி.வி.பிரகாஷ் குமார் கைவசம் ‘அடங்காதே, 4ஜி, செம, குப்பத்து ராஜா, நாச்சியார், ஐங்கரன், சர்வம் தாள மயம், 100% காதல், கோபம், ரெட்டை கொம்பு’ என அடுத்தடுத்து படங்கள் வண்டிகட்டி நிற்கிறது. இதில் ‘ஐங்கரன்’ படத்தை ‘ஈட்டி’ புகழ் ரவி அரசு இயக்கி வருகிறார்.

‘விர்ஜின் பசங்கத் தலைவர்’ ஜி.வி.பிரகாஷுக்கு ஜோடியாக ‘சாட்டை’ புகழ் மகிமா நம்பியார் டூயட் பாடி ஆடி வருகிறார். ஜி.வி.பிரகாஷே இசையமைத்து வரும் இதற்கு சரவணன் அபிமன்யு ஒளிப்பதிவு செய்து வருகிறார், ராஜாமுகமது படத்தொகுப்பாளராக பணியாற்றுகிறார். இதனை ‘காமன் மேன்’ நிறுவனம் சார்பில் பி.கணேஷ் தயாரித்து வருகிறார். ஏற்கெனவே, படக்குழுவால் டிவிட்டப்பட்ட ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்ஸ் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது.

அதுமட்டுமின்றி, படத்தின் மீதான எதிர்பார்ப்பையும் எகிற வைத்தது. தற்போது, படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு பரபரப்பாக நடைபெற்று வருகிறதாம். இன்னும் 4 நாட்களில் மொத்த ஷூட்டிங்கும் நிறைவடையவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. வெகு விரைவில் ஃபர்ஸ்ட் லுக் டீஸர், டிரையிலர் & ஆடியோ ரிலீஸ் ப்ளான் குறித்த அப்டேட்ஸ் டிவிட்டப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. படத்தை ஏப்ரல் மாதம் ரிலீஸ் செய்யத் திட்டமிட்டுள்ளனராம்.
    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்