விளம்பரம்
முகப்புகோலிவுட்

ஸ்ட்ரைக் முடிந்த பிறகு கோவா செல்லவுள்ள ‘ஐங்கரன்’ டீம்

  | April 12, 2018 10:57 IST
Ayngaran First Look Posters

துனுக்குகள்

  • ஜி.வி.பிரகாஷுக்கு ஜோடியாக ‘சாட்டை’ புகழ் மகிமா நம்பியார் நடிக்கிறார்
  • இதன் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்ஸ் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது
  • இன்னும் ஒரு பாடல் காட்சியின் ஷூட்டிங் மட்டுமே பேலன்ஸ் உள்ளதாம்
‘நாச்சியார்’ படத்திற்கு பிறகு ஹீரோவாக ஜி.வி.பிரகாஷ் குமார் கைவசம் ‘அடங்காதே, 4ஜி, செம, குப்பத்து ராஜா, ஐங்கரன், சர்வம் தாள மயம், 100% காதல், கோபம், ரெட்டை கொம்பு, கோபி நயினார் படம், வசந்தபாலன் படம், ஏ.எல்.விஜய் படம்’ என அடுத்தடுத்து படங்கள் வண்டிகட்டி நிற்கிறது. இதில் ‘ஐங்கரன்’ படத்தை ‘ஈட்டி’ புகழ் ரவி அரசு இயக்கி வருகிறார்.

‘விர்ஜின் பசங்கத் தலைவர்’ ஜி.வி.பிரகாஷுக்கு ஜோடியாக ‘சாட்டை’ புகழ் மகிமா நம்பியார் டூயட் பாடி ஆடி வருகிறார். ஜி.வி.பிரகாஷே இசையமைத்து வரும் இதற்கு சரவணன் அபிமன்யு ஒளிப்பதிவு செய்து வருகிறார், ராஜாமுகமது படத்தொகுப்பாளராக பணியாற்றுகிறார். இதனை ‘காமன் மேன்’ நிறுவனம் சார்பில் பி.கணேஷ் தயாரித்து வருகிறார். ஏற்கெனவே, வெளியிடப்பட்ட ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்ஸ் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது.

அதுமட்டுமின்றி, படத்தின் மீதான எதிர்பார்ப்பையும் எகிற வைத்தது. படத்தின் ஷூட்டிங் முடிவடையும் தருவாயில் உள்ளதாம். தற்போது, இன்னும் ஒரு பாடல் காட்சியின் ஷூட்டிங் மட்டுமே பேலன்ஸ் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் அறிவித்த ஸ்ட்ரைக் முடிந்த பிறகு இப்பாடல் காட்சியை படமாக்க ‘ஐங்கரன்’ டீம் கோவா பறக்கவுள்ளதாம். வெகு விரைவில் ஃபர்ஸ்ட் லுக் டீசர், டிரெய்லர் & ஆடியோ ரிலீஸ் ப்ளான் குறித்த அப்டேட்ஸ் ட்வீட்டப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
 

    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்