முகப்புகோலிவுட்

'குப்பத்து ராஜா'வின் ஆடியோ ரைட்ஸை வாங்கிய பிரபல நிறுவனம்

  | May 12, 2018 12:04 IST
Kuppathu Raja First Look

துனுக்குகள்

  • இதில் ஜி.வி.பி-க்கு ஜோடியாக டபுள் ஹீரோயின்ஸாம்
  • முக்கிய வேடத்தில் இயக்குநர் பார்த்திபன் நடித்துள்ளார்
  • இதன் டீசர் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது
‘நாச்சியார்’ படத்திற்கு பிறகு ஹீரோவாக ஜி.வி.பிரகாஷ் குமார் கைவசம் ‘அடங்காதே, 4ஜி, செம, குப்பத்து ராஜா, ஐங்கரன், சர்வம் தாள மயம், 100% காதல், கோபம், ரெட்டை கொம்பு, கோபி நயினார் படம், வசந்தபாலன் படம், ஏ.எல்.விஜய் படம்’ என அடுத்தடுத்து படங்கள் வண்டிகட்டி நிற்கிறது. இதில் ‘குப்பத்து ராஜா’ படத்தை பிரபல நடன இயக்குநர் பாபா பாஸ்கர் இயக்கி வருகிறார். ‘விர்ஜின் பசங்கத் தலைவர்’ ஜி.வி.பிரகாஷுக்கு ஜோடியாக பூனம் பாஜ்வா, பல்லக் என டபுள் ஹீரோயின்ஸாம்.

முக்கிய வேடத்தில் இயக்குநர் பார்த்திபன் நடித்துள்ளார். ஜி.வி.பியே இசையமைத்து வரும் இதற்கு மகேஷ் முத்துசாமி ஒளிப்பதிவு செய்துள்ளார், பிரவீன்.கே.எல் படத்தொகுப்பாளராக பணியாற்றுகிறார். ‘S ஃபோக்கஸ்’ என்ற நிறுவனம் தயாரித்து வருகிறது. சமீபத்தில், வெளியிடப்பட்ட ஃபர்ஸ்ட் லுக் மற்றும் டீசர் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது.
 
அதுமட்டுமின்றி, படத்தின் மீதான எதிர்பார்ப்பையும் அதிகரிக்கச் செய்தது. இதன் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் பரபரப்பாக நடைபெற்று வருகிறது. தற்போது, படத்தின் ஆடியோ ரைட்ஸை ‘ஜங்லீ மியூசிக்’ நிறுவனம் கைப்பற்றியுள்ளதாக அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகியுள்ளது. இதை ‘S ஃபோக்கஸ்’ நிறுவனமே தங்களது ட்வீட்டர் பக்கத்தில் ஸ்டேட்டஸாகத் தட்டி உறுதிபடுத்தியுள்ளது. வெகு விரைவில் படத்தின் ஆடியோ & டிரெய்லர் ரிலீஸ் ப்ளான் குறித்த அப்டேட்ஸ் ட்வீட்டப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்