முகப்புகோலிவுட்

ஜி.வி.பிரகாஷின் ‘சர்வம் தாள மயம்’ ஷூட்டிங் ப்ளான்

  | October 31, 2017 16:24 IST
Sarvam Thaala Mayam Movie

துனுக்குகள்

  • நடிகராக ஜி.வி.பிரகாஷ் குமார் கைவசம் 10 படங்கள் உள்ளது
  • இப்படத்தில் இடம்பெறும் 9 பாடல்களின் கம்போஸிங்கும் ஓவராம்
  • இதனை பிரபல ஒளிப்பதிவாளர் ராஜீவ் மேனன் இயக்கவிருக்கிறார்
'புரூஸ் லீ' படத்திற்கு பிறகு ஹீரோவாக ஜி.வி.பிரகாஷ் குமார் கைவசம் ‘அடங்காதே, 4ஜி, செம, குப்பத்து ராஜா, நாச்சியார், ஐங்கரன், சர்வம் தாள மயம், 100% காதல், கோபம், ரெட்டை கொம்பு’ என அடுத்தடுத்து படங்கள் வண்டிகட்டி நிற்கிறது. இதில் ‘சர்வம் தாள மாயம்’ படத்தை பிரபல ஒளிப்பதிவாளர் ராஜீவ் மேனன் இயக்கவிருக்கிறார்.

இவர் ஏற்கெனவே, ‘மின்சார கனவு, கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன்’ ஆகிய 2 படங்களை இயக்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. ‘சர்வம் தாள மாயம்’ படத்தில் ஜி.வி.பிரகாஷ் யங் மியூசிசியனாக வலம் வரவுள்ளாராம். இதற்கு ‘இசை புயல்’ ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார். படத்தில் இடம்பெறும் 9 பாடல்களின் கம்போஸிங்கும் ஓவராம்.

அதுமட்டுமின்றி, படத்தின் தொடக்க காட்சியிலிருந்து இறுதிக்காட்சி வரை அனைத்து சீன்களுக்கும் பின்னணி இசையமைப்பு (BGM) பணியையும் ஏ.ஆர்.ரஹ்மான் முடித்து கொடுத்து விட்டாராம். தற்போது, படத்தின் ஷூட்டிங்கை வருகிற டிசம்பர் மாதம் துவங்கத் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. வெகு விரைவில் இப்படத்தில் நடிக்கவிருக்கும் ஹீரோயின், இதர நடிகர்கள் மற்றும் பணியாற்றவுள்ள தொழில்நுட்ப கலைஞர்களின் பட்டியல் டிவிட்டப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
 
    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்