விளம்பரம்
முகப்புகோலிவுட்

மீண்டும் இணையும் ‘ஹரஹர மஹாதேவகி’ காம்போ

  | September 11, 2017 17:15 IST
Hara Hara Mahadevaki Audio Launch

துனுக்குகள்

  • கெளதம் கார்த்திக் கைவசம் 4 படங்கள் உள்ளது
  • இதன் இசை வெளியீட்டு விழா பிரம்மாண்டமாக நடைபெற்றது
  • மீண்டும் சந்தோஷுடன் கெளதம் கைகோர்க்கும் பட டைட்டிலை அறிவித்தனர்
ஆர்.கண்ணனின் ‘இவன் தந்திரன்’ படத்தின் வெற்றிக்கு பிறகு கெளதம் கார்த்திக் கைவசம் கலா பிரபுவின் ‘இந்திரஜித்’, சந்தோஷ்.பி.ஜெயக்குமாரின் ‘ஹரஹர மஹாதேவகி’, ஆறுமுக குமாரின் ‘ஒரு நல்லநாள் பாத்து சொல்றேன்’ என அடுத்தடுத்து படங்கள் வண்டி கட்டி நிற்கிறது. இதில் ‘ஹரஹர மஹாதேவகி’ படத்தில் கெளதம் கார்த்திக்கு ஜோடியாக நிக்கி கல்ராணி டூயட் பாடி ஆடியுள்ளார்.

மேலும், சதீஷ், கருணாகரன், மொட்ட ராஜேந்திரன், ரவி மரியா, பாலசரவணன், ஆர்.கே.சுரேஷ், மயில்சாமி, நமோ நாராயணன், மனோபாலா என பெரிய நட்சத்திரப் பட்டாளமே நடித்துள்ளதாம். பாலமுரளி பாலு இசையமைத்துள்ள இதற்கு செல்வக்குமார் ஒளிப்பதிவு செய்துள்ளார். ‘BLUE GHOST பிக்சர்ஸ் - தங்கம் சினிமாஸ்’ நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ள இதனை வருகிற செப்டெம்பர் 29-ஆம் தேதி ரிலீஸ் செய்யத் திட்டமிட்டுள்ளனர்.

நேற்று (செப்டெம்பர் 10-ஆம் தேதி) இதன் இசை வெளியீட்டு விழா சென்னையிலுள்ள கலைவாணர் அரங்கத்தில் பிரம்மாண்டமாக நடைபெற்றது. இவ்விழாவில் பேசிய இயக்குநர் சந்தோஷ்.பி.ஜெயக்குமார், தான் மீண்டும் கெளதம் கார்த்திக்குடன் கைகோர்க்கவுள்ளதாகவும், அந்த படத்திற்கு ‘இருட்டு அறையில் முரட்டுக் குத்து’ என டைட்டில் சூட்டியுள்ளதாகவும் அறிவித்துள்ளார். இப்படத்தை ‘ஸ்டுடியோ கிரீன்’ நிறுவனம் சார்பில் கே.ஈ.ஞானவேல்ராஜா தயாரிக்கவுள்ளாராம்.
 
    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்