விளம்பரம்
முகப்புகோலிவுட்

அனிருத் டிவிட்டிய ‘ஹரஹர மஹாதேவகி’ டிரையிலர்

  | August 11, 2017 17:30 IST
Hara Hara Mahadevaki Trailer

துனுக்குகள்

  • கெளதம் கார்த்திக் கைவசம் 3 படங்கள் உள்ளது
  • இதில் ஹீரோயினாக நிக்கி கல்ராணி நடித்துள்ளார்
  • இதன் டீஸர் & சிங்கிள் டிராக் செம லைக்ஸ் குவித்தது
ஆர்.கண்ணனின் ‘இவன் தந்திரன்’ படத்தின் வெற்றிக்கு பிறகு கெளதம் கார்த்திக் கைவசம் கலா பிரபுவின் ‘இந்திரஜித்’, சந்தோஷ்.பி.ஜெயக்குமாரின் ‘ஹரஹர மஹாதேவகி’, ஆறுமுக குமாரின் ‘ஒரு நல்லநாள் பாத்து சொல்றேன்’ என அடுத்தடுத்து படங்கள் வண்டி கட்டி நிற்கிறது. இதில் ‘ஹரஹர மஹாதேவகி’ படத்தில் கெளதம் கார்த்திக்கு ஜோடியாக நிக்கி கல்ராணி டூயட் பாடி ஆடியுள்ளார்.

மேலும், சதீஷ், கருணாகரன், மொட்ட ராஜேந்திரன், ரவி மரியா, பாலசரவணன், ஆர்.கே.சுரேஷ், மயில்சாமி, நமோ நாராயணன், மனோபாலா என பெரிய நட்சத்திரப் பட்டாளமே நடித்துள்ளதாம். பாலமுரளி பாலு இசையமைத்து வரும் இதற்கு செல்வக்குமார் ஒளிப்பதிவு செய்துள்ளார். ‘BLUE GHOST பிக்சர்ஸ்’ நிறுவனத்துடன் இணைந்து ‘தங்கம் சினிமாஸ்’ நிறுவனம் சார்பில் எஸ்.தங்கராஜ் தயாரித்து வருகிறார்.
 

படத்தின் ஷூட்டிங் நிறைவடைந்து போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடைபெற்று வருகிறது. சமீபத்தில் படக்குழுவால் டிவிட்டப்பட்ட ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்ஸ், சிங்கிள் டிராக் மற்றும் டீஸர் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது. தற்போது, படத்தின் டிரையிலரை இசையமைப்பாளர் அனிருத் தனது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இந்த டிரையிலர் ரசிகர்களிடையே செம லைக்ஸ் குவித்து வைரலாகி வருகிறது. அதுமட்டுமின்றி, படத்தின் மீதான எதிர்பார்ப்பையும் அதிகரிக்கச் செய்துள்ளது.

    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்