முகப்புகோலிவுட்

பிக்பாஸ் ஹரீஷ், ரைசா நடித்த 'பியார் பிரேமா காதல்' மோஷன் போஸ்டர்

  | February 10, 2018 10:15 IST
Pyaar Prema Kaadhal  Movie Posters

துனுக்குகள்

  • ‘பிக் பாஸ்’-க்கு பிறகு இவர்களுக்கு ரசிகர்கள் பட்டாளம் அதிகமாகியுள்ளது
  • இதன் ஃபர்ஸ்ட் லுக் நல்ல வரவேற்பை பெற்றது
  • இன்று படத்தின் மோஷன் போஸ்டரை வெளியிட்டுள்ளனர்
அறிமுக இயக்குநர் இளன் இயக்கியுள்ள படம் ‘கிரகணம்’. டபுள் ஹீரோ சப்ஜெக்டான இதில் கிருஷ்ணா – ‘கயல்’ சந்திரன் இணைந்து நடித்துள்ளனர். இப்படம் ரிலீஸுக்கு வெயிட்டிங் லிஸ்டில் உள்ளது. இதனையடுத்து இளன் இயக்கும் படத்திற்கு ‘பியார் பிரேமா காதல்’ என டைட்டில் சூட்டியுள்ளனர். இந்த படத்தில் ‘பிக் பாஸ்’ போட்டியாளர்களான ஹரீஷ் கல்யாண், ரைசா வில்சன் ஜோடியாக நடித்து வருகின்றனர்.

‘பிக் பாஸ்’ நிகழ்ச்சிக்கு பிறகு இவர்கள் இருவருக்கும் ரசிகர்கள் பட்டாளம் அதிகமாகியுள்ளது குறிப்பிடத்தக்கது. யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கும் இதற்கு ராஜா பட்டாச்சார்ஜி ஒளிப்பதிவு செய்கிறார், மணிக்குமரன் சங்கரா படத்தொகுப்பாளராக பணியாற்றுகிறார். இதனை ‘கே புரொடக்ஷன்ஸ்’ நிறுவனத்துடன் இணைந்து யுவன் ஷங்கர் ராஜா தனது சொந்த தயாரிப்பு நிறுவனமான ‘YSR ஃபிலிம்ஸ்’ மூலம் தயாரித்து வருகிறார்.
 

ஏற்கெனவே, வெளியிடப்பட்ட படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்ஸ் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது. இதன் ஷூட்டிங் பரபரப்பாக நடைபெற்று வருகிறது. தற்போது, படத்தின் மோஷன் போஸ்டரை வெளியிட்டுள்ளனர். இந்த மோஷன் போஸ்டர் ரசிகர்களிடையே செம லைக்ஸ் குவித்து வைரலாகி வருகிறது. அதுமட்டுமின்றி, படத்தின் மீதான எதிர்பார்ப்பையும் அதிகரிக்கச் செய்துள்ளது.

    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்