முகப்புகோலிவுட்

அமேசானில் புதிய மியூசிக்கல் சீரிஸ் – ‘ஹார்மோனி வித் ஏ.ஆர்.ரஹ்மான்’ டிரெய்லர்

  | August 10, 2018 13:52 IST
Harmony With Ar Rahman

துனுக்குகள்

  • ஏ.ஆர்.ரஹ்மான் மியூசிக்கல் சீரிஸ் ஒன்றை தொகுத்து வழங்கவுள்ளார்
  • இதற்கு ‘ஹார்மோனி வித் ஏ.ஆர்.ரஹ்மான்’ என டைட்டில் சூட்டப்பட்டுள்ளது
  • இந்த சீரிஸுக்காக 4 முக்கிய இசை கலைஞர்களை ரஹ்மான் நேரில் சந்தித்துள்ளார்
பிரபல இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் கைவசம் ரஜினியின் ‘2.0’, விஜய்யின் ‘சர்கார்’, மணிரத்னமின் ‘செக்கச்சிவந்த வானம்’, சிவகார்த்திகேயனின் சைன்ஸ்-ஃபிக்ஷன் படம் என அடுத்தடுத்து படங்கள் வண்டி கட்டி நிற்கிறது. இதில் ‘2.0’ படத்தின் பாடல்கள் ஏற்கெனவே வெளியிடப்பட்டு ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது.

தற்போது, பிரபல டிஜிட்டல் பிளாட்ஃபார்மான ‘அமேசான்’-யில் ஏ.ஆர்.ரஹ்மான் மியூசிக்கல் சீரிஸ் ஒன்றை தொகுத்து வழங்குவதாக தகவல் வெளியாகியுள்ளது. இதற்கு ‘ஹார்மோனி வித் ஏ.ஆர்.ரஹ்மான்’ என டைட்டில் சூட்டப்பட்டுள்ளது.
 

இந்த சீரிஸுக்காக வெவ்வேறு மாநிலத்தில் இருக்கும் 4 முக்கிய இசை கலைஞர்களை ரஹ்மான் நேரில் சந்தித்துள்ளார். இன்று இதன் டிரெய்லரை ரஹ்மான் தனது ட்வீட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இந்த சீரிஸ் அமேசானில் வருகிற ஆகஸ்ட் 15-ஆம் தேதி ரிலீஸாகுமாம்.

    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்