முகப்புகோலிவுட்

‘துருவ நட்சத்திரம்’ படத்தின் சிங்கிள் டிராக் குறித்து ஹாரிஸ் ஜெயராஜ் ட்வீட்

  | November 08, 2018 15:19 IST
Harris Jayaraj

துனுக்குகள்

  • இப்படத்தில் ரித்து வர்மா, ஐஸ்வர்யா ராஜேஷ் என 2 ஹீரோயின்ஸாம்
  • இதன் 3 டீசர்கள் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது
  • இந்த படத்துக்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்து வருகிறார்
ஹரியின் ‘சாமி ஸ்கொயர்' படத்துக்கு பிறகு விக்ரம் நடிப்பில் உருவாகி வரும் படம் ‘துருவ நட்சத்திரம்'. கெளதம் மேனன் இயக்கி வரும் இந்த படத்தில் விக்ரமுக்கு ஜோடியாக ‘பெல்லி சூப்புலு' புகழ் ரிதுவர்மா, ஐஸ்வர்யா ராஜேஷ் என டபுள் ஹீரோயின்ஸாம். மேலும், முக்கிய வேடங்களில் இயக்குநர் பார்த்திபன், ராதிகா, சிம்ரன், வம்சி, திவ்யதர்ஷினி, மாயா, விநாயகன் ஆகியோர் நடிக்கின்றனர்.

ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்து வரும் இதற்கு மனோஜ் பரமஹம்சா ஒளிப்பதிவு செய்து வருகிறார், பிரவீன் ஆண்டனி படத்தொகுப்பாளராக பணியாற்றுகிறார். ‘கொண்டாடுவோம் எண்டர்டெயின்மெண்ட் – எஸ்கேப் ஆர்டிஸ்ட்ஸ் மோஷன் பிக்சர்ஸ்' நிறுவனங்களுடன் இணைந்து இயக்குநர் கெளதம் மேனன் தனது ‘ஒன்றாக எண்டர்டெயின்மெண்ட்' நிறுவனம் மூலம் பிரம்மாண்டமாக தயாரித்து வருகிறார்.

 
சமீபத்தில், வெளியிடப்பட்ட 3 டீசர்கள் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது. அதுமட்டுமின்றி, படத்தின் மீதான எதிர்பார்ப்பையும் அதிகரிக்கச் செய்தது. தற்போது, இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ் தனது ட்விட்டர் பக்கத்தில் “இந்த படத்தில் இடம்பெறும் ‘ஒரு மனம்' என்ற பாடலை இம்மாதம் (நவம்பர்) ரிலீஸ் செய்யத் திட்டமிட்டுள்ளோம்” என்று ஸ்டேட்டஸ் தட்டியுள்ளார்.
 
    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்