முகப்புகோலிவுட்

ரஜினிகாந்தின் '2.0' இந்தாண்டு வெளியாகாதா?

  | June 11, 2018 18:20 IST
Rajinikanth 2.0

துனுக்குகள்

 • எந்திரன் படத்தின் இரண்டாம் பாகம் 2.0
 • ரஜினி - ஷங்கர் கூட்டணியில் பிரம்மாண்டமாக தயாராகிறது
 • இதன் ரிலீஸ் பற்றிய தகவல் பரவி வருகிறது
2010ல் ரஜினிகாந்த் - ஷங்கர் கூட்டணியில் உருவாகி வெளியான படம் `எந்திரன்'. இப்படத்தின் இரண்டாம் பாகமான, 2.0 மிக பிரம்மாண்டமாக தயாரானது. சென்ற வருட தீபாவளிக்கு வெளியாகும் என சொல்லப்பட்டது. ஆனால், வி.எஃப்.எக்ஸ் பணிகள் காரணமாக பட வெளியீட்டில் தாமதம் உருவானது. எனவே படம் 2018ல் வெளியாகும் என சொல்லப்பட்டது.

இதனிடையில் ரஜினி நடித்த `காலா' வெளியாகிவிட்டது. கூடவே ரஜினியும் கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் நடிக்கும் படத்தில் இணைந்துவிட்டார், அக்ஷய் குமார் நடித்த `பேட்மேன்' படமும் வெளியாகிவிட்டது, அடுத்த படமான `கோல்ட்' படமும் சுதந்திர தினத்தன்று வெளியாகவுள்ளது. இவ்வளவு ஏன், 2.0 படத்தின் டீசர் கூட திருட்டுத்தனமாக வெளியாகிவிட்டது. ஆனால் `2.0' படத்தின் டீசர் கூட இன்னும் அதிகாரப்பூர்வமாக வெளியாகவில்லை. படத்தின் ரிலீஸ் பற்றிய தகவலும் வெளியாகவில்லை.

இந்நிலையில், படத்தின் வி.எஃப்.எக்ஸ் பணிகள் இன்னும் நடந்து கொண்டிருப்பதால் படத்தின் வெளியீடு இந்தாண்டு இருக்காது, அடுத்த வருடம்தான் என பாலிவுட் இணையதளம் ஒன்று தகவல் வெளியிட்டிருக்கிறது. ஆனால், இது பற்றி 2.0 தரப்பிலிருந்து எந்த தகவலும் வெளிவரவில்லை. விரைவில் இது பற்றி அதிகாரப்பூர்வ அறிவிப்பு வரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

  தொடர்புடைய விடியோ

  விளம்பரம்
  விளம்பரம்
  விளம்பரம்