விளம்பரம்
முகப்புகோலிவுட்

கட்டப்பா பாகுபலியை கொன்ற போது நடந்தது என்ன? - மனம் திறக்கிறார் கலை இயக்குநர் சாபு ஸிரில்

  | April 26, 2017 11:05 IST
Movies

துனுக்குகள்

  • சம்பல்வேலி பகுதியில் முக்கியமான காட்சிகள் படமாக்க திட்டமிட்டிருந்தது
  • 200 நபர்கள் என் தலைமையில் இரவு பகலாக வேலை செய்தனர்
  • ராஜஸ்தானில் இருந்து உண்மையான மரங்கள் கொண்டு வர பட்டது
இன்று உலகமே எதிர்பார்த்த பாகுபலி இரண்டாம் பாகத்தின் டிரையிலர் வெளியாகி பல சாதனைகளை புரிந்து வருகிறது. குறிப்பாக எல்லோர் மனதிலும் உள்ள ஒரு கேள்வி, கட்டப்பா ஏன் பாகுபலியை கொன்றார், என்பதற்கான விடையை மக்கள் அனைவரும் எதிர்பார்த்துள்ள நிலையில், பாகுபலி இரண்டாம் பாகத்தின் அனுபவங்களை பற்றி NDTV க்கு தேசிய விருது பெற்ற கலை இயக்குநர் சாபு ஸிரில் பாகுபலி திரைப்படத்தில் இடம்பெற்று முக்கியமான காட்சிகளின் உருவாக்குதலை பற்றி நம்மிடம் பகிர்ந்து கொண்டார்.

சில காட்சிகள் படமாக்க தயாராகும் போது மழை பெய்து படப்பிடிப்புகள் அங்கு நடக்காமல் நின்றுவிட்டது:-

அதை சொல்லி புரிய வைக்க இயலாது மிகவும் கஷ்டப்பட்டுள்ளோம் என்றும் அந்த காட்சி இத்திரைப்படத்தில் அதாவது பாகுபலி இரண்டாம் பாகத்தின் மிக முக்கியமான காட்சியாக அமைக்கப்பட்டுள்ளது என்றும், அதிக மனித உழைப்பையும் நேரத்தையும் செலவிட்டு அந்த காட்சிக்கான கலந்துரையாடல் நடந்து கொண்டிருந்தது இறுதியாக அந்த காட்சியை படமாக்க திட்டமிட்டிருந்தோம் என்றும், அந்த காட்சி வேறு எதுவுமில்லை அனைவரின் மனதிலும் உள்ள கட்டப்பா ஏன் பாகுபலியை கொன்றார்? என்பதை விளக்கும் காட்சி தானாம். மிகப் பிரம்மாண்டமான பாகுபலி போன்ற படங்களுக்கு செட் அமைப்பது என்பது சாதாரன விஷயமும் அல்ல.

இது பற்றி கூறிய சாபு, "நீங்கள் தற்போது திரையில் பார்த்த அந்த காட்சிகள் நாங்கள் ஏற்கனவே தேர்ந்தெடுத்த இடம் இல்லை, எல்லா கலந்துரையாடலும் முடிந்த பின் இயக்குநர் ராஜமெளலி நாங்கள் தேர்ந்தெடுத்த வடமாநில இடமான சம்பால் வேலிக்கு ஒரு நபரை அனுப்பி படப்பிடிப்பிற்கான இடத்தை பார்வையிட்டு வர சொன்னோம், சம்பா வேலி என்பது மிகவும் வறண்ட பூமி என்பதால் தான் நாங்கள் தேர்ந்தெடுத்திருந்தோம், ஆனால் அங்கு சென்ற போது மழை பெய்து அந்த இடமே பச்சையாக சூழப்பட்டு காட்சியளித்தது, இந்த நிகழ்வு என்பது நாங்கள் யாரும் எதிர்பார்க்கவில்லை, அடுத்ததாக என்ன செய்யலாம் என்று யோசித்துக்கொண்டிருக்கும் போது எனக்கு ஹைதராபாத் அருகே உள்ள ஒரு குவாரி நியாபகத்திற்கு வந்தது, சுமார் 6 ஏக்கரில் உள்ள அந்த குவாரி இந்த காட்சிக்கு மிகவும் பொருத்தமாக இருக்கும் என்று எண்ணினேன், இயக்குநரிடம் கூறினேன் அவரும் வந்த பார்வையிட்டார், இடம் பிடித்திருந்தாளும் அதில் ஒரு பெரிய சிக்கல் இருந்தது, அந்த இடத்தை அப்படியே பயன்படுத்த முடியாது, காட்சியை படமாக்க பல மாற்றங்கள் செய்ய வேண்டி இருந்தது, எங்களுக்கு இங்கு இருக்கும் சவாலே படப்பிடிப்பு துவங்க வெறும் 30 நாட்கள் மட்டுமே, ஆனால் வேலை துவங்கும் முன்னரே இயக்குநரிடம் இந்த வேலையை முடிக்க எனக்கு 45 நாட்கள் வேண்டும் என்று கேட்டிருந்தேன் இயக்குநரும் சம்மதம் தெரிவித்தார், அதனால் மிகுந்த சவாலான இந்த வேலை மிகுந்த நம்பிக்கையுடம் எடுத்தோம் கடின உழைப்பின் காரணமாக முடித்து காட்டினோம்.

மிக கடினமான பிரம்மாண்டமான வேலை:-

baahubali 2

இந்த செட் அமைக்கும் பணிக்காக பெயிண்டர்ஸ், கொத்தனார், கார்பெண்டர்ஸ் என மிகப்பெரிய மனித உழைப்பு தேவைப்பட்டள்ளது, இதனை பற்றி சாபு கூறுகையில் இந்த காட்சி அமைக்க என்னுடைய யோசனைப்படி, கிட்டத்தட்ட 100 லாரிகளுக்கு மேலாக மண் தேவைப்பட்டது, மேலும் படக்குழுவினர் வந்து செல்ல சாலை வசதிகளும் குவாரி முழுக்க தேவைப்பட்டது, அதனையும் தயார் செய்தோம், செட் அமைப்பிற்காக ராஜஸ்தானிலிருந்து சில உண்மையான மரங்களும் கொண்டுவரப்பட்டது, அதன் பின் ஃபைபர் கண்ணாடிகள் மூலம் 30க்கும் மேற்பட்ட மரங்களையும் உருவாக்கினோம், நாங்கள் செய்த மரங்களில் 60 அடி உயரத்திற்கு ஒரு பிரம்மாண்ட மரமும், 30 அடி உயரமும் 40 அடி அகலமும் கொண்ட இன்னொரு மரமும், அதன் தோற்றங்கள் பிரமிப்பாக இருந்தது. மேலும் அந்த குவாரியில் அனைத்து பாறைகளுமே 60 அடிக்கு மேல் இருந்தது, இயக்குநர் கேட்டது போல் சிவப்பு நிறங்களில் பெயிண்ட் செய்யப்பட்டது, திரையில் பார்க்கையில் உருவாக்கப்பட்ட செட் போல் இல்லாமல், உண்மையான களம் போல் தெரிவதற்காக மிகப்பெரிய வேலைகள் செய்தோம். கிட்டத்தட்ட 200 நபர்கள் என்னுடைய தலைமையில் மட்டும் இரவு பகலாக வேலை பார்த்தனர், கையில் வாக்கி டாக்கியுடன் வேலைகள் விறு விறுப்பாக நடைப்பெற்றது, பாகுபலி போன்ற பிரம்மாண்டமான படங்களில் வேலை செய்யும் போது, பல தருனங்களில் நாம் எதிர்பார்த்தது நடப்பது இல்லை, சில சமயங்களில் படப்பிடிப்பிற்காக நாம் தயார் செய்து வைத்திருந்த சில பொருட்கள் சேதமடைந்து இருக்கும் ஆகையால் சில மாற்றங்கள் செய்ய வேண்டியது இருக்கும், அந்த மாற்றத்தை சரியாக புரிந்து கொண்டு, அதனை மேலும் மெருகேற்றும் வேலையில் நான் ஈடுபட்டு வந்தேன், என்னுடைய வேலையில் செட் அமைப்பது மட்டுமின்றி சில இக்கட்டான சூழ்நிலைகளில் சில மாற்றங்களை செய்யவேண்டியதிருக்கும் அது என் வேலைகளுல் மிக முக்கியமான ஒன்று, இவையெல்லாம் முடிந்து நாங்கள் பட்ட கஷ்டம், துன்பங்கள் அனைத்தும் திரையில் பார்க்கையில் மறந்து போனது, உருவாக்கப்பட்ட செட் போல் தெரியாமல் உண்மையான இடம் காட்சியளித்ததை நினைத்து பெருமைப்படுகிறேன் என்று கூறியுள்ளார்.
 

    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்