விளம்பரம்
முகப்புகோலிவுட்

பிரம்மாண்ட செட்டில் ‘காலா’ படத்தின் ஓப்பனிங் பாடல்

  | August 09, 2017 17:23 IST
Kaala Shooting Spot

துனுக்குகள்

  • சூப்பர் ஸ்டார் – இரஞ்சித் காம்போவில் தயாராகும் 2-வது படம் ‘காலா’
  • ‘2.0’ படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடந்து வருகிறது
  • ‘காலா’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்ஸ் செம லைக்ஸ் குவித்தது
‘கபாலி’ படத்தின் வெற்றிக்கு பிறகு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கைவசம் ஷங்கரின் ‘2.0’ மற்றும் பா.இரஞ்சித்தின் ‘காலா’ ஆகிய 2 படங்கள் உள்ளது. இதில் ‘2.0’ படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடந்து வருகிறது. ‘காலா’ ரஜினிகாந்தின் 164-வது படமாம். இதனை சூப்பர் ஸ்டாரின் மருமகனும், நடிகருமான தனுஷ் தனது சொந்த தயாரிப்பு நிறுவனமான ‘வுண்டர்பார் ஃபிலிம்ஸ்’ மூலம் தயாரிக்கிறார்.

ரஜினிகாந்துடன் ஹூமா குரேஷி, இயக்குநர் சமுத்திரக்கனி, அஞ்சலி பட்டில், ஈஸ்வரி ராவ், நானா படேகர், அருந்ததி, சாக்ஷி அகர்வால் என பெரிய நட்சத்திரப் பட்டாளமே நடித்து வருகிறதாம். மும்பையில் வாழும் திருநெல்வேலி மக்களின் பின்னணியில் கதைக்களம் அமைக்கப்பட்டுள்ளதாம். சந்தோஷ் நாராயணன் இசையமைத்து வரும் இதற்கு முரளி.ஜி ஒளிப்பதிவு செய்கிறார், ஸ்ரீகர் பிரசாத் படத்தொகுப்பாளராக பணியாற்றுகிறார்.

சமீபத்தில், ‘காலா’ டீமால் டிவிட்டப்பட்ட ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்ஸ் மற்றும் ஷூட்டிங் ஸ்பாட் ஸ்டில்ஸ் ரசிகர்களிடம் செம லைக்ஸ் குவித்து வைரலானது. படத்தின் ஷூட்டிங் பரபரப்பாக நடைபெற்று வருகிறது. தற்போது, சென்னையில் போடப்பட்டுள்ள பிரம்மாண்ட செட்டில் சூப்பர் ஸ்டாரின் மாஸான ஓப்பனிங் பாடலை படமாக்கப்பட்டு வருகின்றனர். இந்த பாடலுக்கு டான்ஸ் மாஸ்டர் சாண்டி நடனம் அமைத்து வருகிறாராம். சாண்டியின் கேரியரில் மெகா பட்ஜெட் படம் ‘காலா’. மேலும், ‘சூப்பர் ஸ்டார்’ ரஜினிகாந்தின் படத்திற்கு நடனம் அமைப்பது மிக பெருமையாக உள்ளது என சாண்டி தெரிவித்துள்ளார்.h
    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்