விளம்பரம்
முகப்புகோலிவுட்

‘காலா’வுக்கு குட்-பை சொன்ன ஹூமா குரேஷி

  | November 01, 2017 12:40 IST
Kaala Shooting Updates

துனுக்குகள்

  • சூப்பர் ஸ்டார் கைவசம் ‘காலா, 2.0’ ஆகிய 2 படங்கள் உள்ளது
  • முக்கிய வேடத்தில் ஹூமா குரேஷி நடிக்கிறார்
  • ஏற்கெனவே, ரஜினியின் அனைத்து காட்சிகளும் படமாக்கப்பட்டு விட்டதாம்
‘கபாலி’ படத்தின் வெற்றிக்கு பிறகு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கைவசம் ஷங்கரின் ‘2.0’ மற்றும் பா.இரஞ்சித்தின் ‘காலா’ ஆகிய 2 படங்கள் உள்ளது. இதில் ‘காலா’ ரஜினிகாந்தின் 164-வது படமாம். இதனை சூப்பர் ஸ்டாரின் மருமகனும், நடிகருமான தனுஷ் தனது சொந்த தயாரிப்பு நிறுவனமான ‘வுண்டர்பார் ஃபிலிம்ஸ்’ மூலம் தயாரிக்கிறார்.
 
முக்கிய வேடங்களில் ஹூமா குரேஷி, இயக்குநர் சமுத்திரக்கனி, ஈஸ்வரி ராவ், நானா படேகர் மற்றும் பலர் நடிக்கின்றனராம். சந்தோஷ் நாராயணன் இசையமைத்து வரும் இதற்கு முரளி.ஜி ஒளிப்பதிவு செய்கிறார், ஸ்ரீகர் பிரசாத் படத்தொகுப்பாளராக பணியாற்றுகிறார். சமீபத்தில், ‘காலா’ டீமால் டிவிட்டப்பட்ட ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்ஸ் மற்றும் ஷூட்டிங் ஸ்பாட் ஸ்டில்ஸ் ரசிகர்களிடம் செம லைக்ஸ் குவித்து வைரலானது.
 
அதுமட்டுமின்றி, படத்தின் மீதான எக்ஸ்பெக்டேஷன் லெவலையும் அதிகரிக்கச் செய்தது. இதன் இறுதிக்கட்ட படப்பிடிப்பு பரபரப்பாக நடைபெற்று வந்தது. தற்போது, நடிகை ஹூமா குரேஷி சம்பந்தப்பட்ட அனைத்து காட்சிகளும் படமாக்கப்பட்டு விட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. வெகு விரைவில் ஃபர்ஸ்ட் லுக் டீஸர் ரிலீஸ் ப்ளான் குறித்த அப்டேட் டிவிட்டப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
 

    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்