விளம்பரம்
முகப்புகோலிவுட்

ஹரிக்கேன் புயலால் பாதிக்கப்பட்ட அனிருத்

  | September 09, 2017 15:10 IST
Anirudh Ravichander

துனுக்குகள்

  • விவேகம் இசைக்காக உலகெங்கிலும் பாராட்டுக்கள் குவிந்து வருகிறது
  • ஹரிக்கேன் புயலால் பல நகரங்கள் நீரில் மூழ்கி சேதம் அடைந்துள்ளது
  • நெவர் எவர் கிவ் அப்' என்ற பெயரில் இசைநிகழ்ச்சி நடைபெற்று வருகிறது
‘விவேகம்’ திரைப்படத்திற்கு இசையமைத்ததற்காக இசையமைப்பாளர் அனிருத்திற்கு உலகெங்கிலும் இருந்து பாராட்டுக்கள் குவிந்த வண்ணம் உள்ளது. இந்நிலையில் அவர் ‘நெவர் எவர் கிவ் அப்' என்ற பெயரில் அமெரிக்க நாட்டில் ஒரு இசை நிகழ்ச்சியை இம்மாதம் நடத்த அனிருத் திட்டமிட்டு இருந்தார். ஆனால் சமீபத்தில் அமெரிக்காவையே புரட்டி போட்ட ஹரிக்கேன் புயலால் பல நகரங்கள் நீரில் மூழ்கி சேதம் அடைந்துள்ளது. இதனால் அனிருத் தனது இசை பயணத்தை ரத்து செய்துள்ளார்.

இந்நிகழ்ச்சி குறித்து அனிருத் தனது டிவிட்டர் பக்கத்தில், ‘அமெரிக்க மக்கள் ‘ஹரிக்கேன் புயலால் கடும் இன்னல்களை அடைந்துள்ள நிலையில் எனது ‘நெவர் கிவ் அப்’ இசை நிகழ்ச்சியை தற்காலிகமாக ஒத்தி வைத்துள்ளேன். மீண்டும் நிகழ்ச்சி நடைபெறும் தேதி பின்னர் அறிவிக்கப்படும்’ என்று கூறியுள்ளார்.

    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்