முகப்புகோலிவுட்

"ரூம் முழுக்க விக்ரம் சார் படங்கள்... இப்போ அவருக்கு ஹீரோயின்" உற்சாகத்தில் கீர்த்தி சுரேஷ்

  | July 24, 2018 13:51 IST
Saamy Square

துனுக்குகள்

  • ஹரி இயக்கத்தில் உருவாகியிருக்கும் படம் `சாமி ஸ்கொயர்'
  • கீர்த்தி சுரேஷ், ஐஸ்வர்யா ராஜேஷ் நாயகிகளாக நடித்துள்ளனர்
  • தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்திருக்கிறார்
'சாமி' படத்தின் இரண்டாம் பாகமாக `சாமி ஸ்கொயர்' படத்தை உருவாகியிருகிறார் ஹரி. விக்ரம், கீர்த்தி சுரேஷ், ஐஸ்வர்யா ராஜேஷ், பாபி சிம்ஹா, பிரபு, சூரி, டெல்லி கணேஷ் எனப் பலரும் இப்படத்தில் நடித்திருக்கிறார்கள். இப்படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று மாலை நடைபெற்றது.

நிகழ்வில் பேசிய கீர்த்தி சுரேஷ், "இயக்குநர் ஹரியுடன் பணியாற்றும் போது நேரம் குறித்த திட்டமிடல் பற்றி எளிதாக தெரிந்துகொள்ளலாம். படப்பிடிப்பு தளத்தில் பரபரப்பாக இயங்குவதைக் கண்டு நான் ஆச்சரியப்பட்டிருக்கிறேன். ஐஸ்வர்யா ராஜேஷ் நடிகையர் திலகம் பார்த்து இப்போதுதான் என்னுடைய ரசிகையாகியிருக்கிறார். ஆனால், நான் அவர் நடித்த காக்காமுட்டை பார்த்ததிலிருந்தே நான் அவருடைய ரசிகை.

இந்த படத்தில் நான் ஒரு பாடல் பாடியதற்கு காரணம் தயாரிப்பாளர் ஷிபு அண்ணன்தான். அவர்தான் இசையமைப்பாளர் தேவி ஸ்ரீபிரசாத்திடம் நான் பாடும் வீடியோ ஒன்றைக் காட்டிஇருக்கிறார். இதன் மூலம் தமிழ் சினிமாவில் பாடகியாக அறிமுகமாகியிருக்கிறேன். என்னுடைய சிறிய வயதில் அந்நியன் படத்தில் விக்ரம் சாரின் ரெமோ கெட்டப் புகைப்படங்களை அறை முழுவதும் ஒட்டிவைத்திருந்தேன். இப்போ அந்த ரெமோவுடன் இணைந்து நடித்திருக்கிறேன். சாமி படத்தின் முதல் பாகத்தில் விக்ரம் எப்படியிருந்தாரோ அதே போல் இந்த படத்திலும் இருக்கிறார்" என்றார்.
    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்