விளம்பரம்
முகப்புகோலிவுட்

கௌதம் மேனனிடம் பணிபுரியும் வாய்ப்பை நண்பர்களால் இழந்துவிட்டேன் - ஒளிப்பதிவாளர் சுஜித் சாரங்

  | May 10, 2017 13:39 IST
Celebrities

துனுக்குகள்

  • துருவநட்சத்திரம் படத்திற்காக என்னை அழைத்தார் கெளதம் மேனன்
  • ஸ்டண்ட் தீணாவை சீக்கிரம் இயக்குநரா பாக்கலாம்
  • நரகாசூரனும் கதைக்கு முக்கியத்துவமுள்ள படம் தான்
நட்சத்திர மதிப்பு என்பது நல்ல திரைக்கதைக்கு அவசியமில்லை. நல்ல கதைக்களமும், நேர்த்தியான திரைக்கதையும் இருந்தால் எந்த படமும் வெற்றிபெறும் என்பதை நிரூபித்த திரைப்படம் துருவங்கள் பதினாறு. இயக்கம், இசை, படத்தொகுப்பு, ஒளிப்பதிவு என முழுக்க முழுக்க இளம் பட்டாளம் இணைந்து உருவாக்கிருந்த துருவங்கள் பதினாறு விமர்சன ரீதியாக மட்டுமில்லாமல் வணிகரீதியாகவும் வெற்றிவாகை சூடியது. நீண்ட வருடங்களுக்கு பிறகு உண்மையாகவே நூறு நாட்களை கடந்து திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிய திரைப்படம் துருவங்கள் பதினாறு என்று அடித்துக்கூறலாம்.

இந்த வெற்றி கூட்டணி மீண்டும் நரகாசூரன் என்ற திரைப்படத்தில் இணையவிருக்கின்றது. கிட்டத்தட்ட முதன்மை பணிகள் அனைத்தும் முடிவடைந்த நிலையில் இப்படத்தின் படப்பிடிப்பும் மிகவிரைவில் தொடங்கவிருக்கிறது என்கிறார் இளம் ஒளிப்பதிவாளர் சுஜித் சாரங்.

தமிழில் துருவங்கள் பதினாறு திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து தெலுகு படப்பிடிப்பில் மிகவும் பிஸியாக பணிபுரிந்து வரும் சுஜித் சாரங் தன்னுடைய ஒளிப்பதிவு அனுபவங்களை நம்மிடம் பதிவு செய்தார்.
 
sujith sarang

"நான் இண்டஸ்ட்ரிக்கு வந்தது ரொம்ப எதர்ச்சியா நடந்தது. நான் சினிமோட்டோகிராஃர் ஆவேன்னு நெனச்சுக்கூட பாக்கல. நான் படிச்சது ஃபிசிக்ஸ் அந்த டைம்ல அண்ணா அனிமேஷன் படிக்கப்போனாரு. அதுக்கு அப்புறம் அவர் எடிட்டிங் படிச்சாரு அப்ப அவரு தான் நீ சினிமோட்டோகிராஃபி படி நாம ரெண்டுபேரும் சேர்ந்து ஒர்க் பண்ணலாம் அப்டினு சொன்னாரு. எங்களோட அப்பா சாரங்கதரன் நல்ல ஆர்ட்டிஸ்ட். அவரை பாத்து பாத்து சின்ன வயசுல இருந்து அண்ணாவும் நானும் நல்லா வரையுவோம். அது மட்டுமில்லாம சின்ன வயசுல இருந்தே ரெண்டு பெரும் நிறைய படங்கள் பாப்போம். இந்த மாதிரியான விஷயங்கள் தான் எங்களை இங்க வர கொண்டுவந்திருக்குனு நெனைக்கிறேன்" என்று சிரித்துக்கொண்டே கூறுகிறார் சுஜித் சாரங்.
நீங்க தொடகத்துல எந்தெந்த ப்ரொஜெக்ட்ஸ்ல ஒர்க் பண்ணீங்க சுஜித் சாரங்?

"அண்ணா சினிமோட்டோகிராஃபி படிக்க சொன்னதும் நான் சென்னை தரமணில இருக்க ஃபிலிம் இன்ஸ்டிடுட்ல சேர்ந்து சினிமோட்டோகிராஃபி படிச்சேன். படிச்சுட்டு இருக்கும்பொழுதே விளம்பர படங்கள்ல ஒர்க் பண்ணேன் சரியா அந்த டைம்ல தான் நாளைய இயக்குநர் நிகழ்ச்சி நடந்துட்டு வந்ததது. அப்போ தான் ஒரு சில குறும்படங்கள்ல ஒர்க் பண்ணேன். நடிகர் விஜய் சேதுபதி நடிச்சு அருண்குமார் இயக்கியிருந்த பண்ணையாரும் பத்மினியும் படத்தோட குறும்படத்துக்கு நான் தான் சினிமோட்டோகிராஃபி பண்ணேன்" என்று மகிழ்ச்சியுடன் தெரிவித்த சுஜித்

முதன்முதலில் அறிமுகமானது தெலுகு திரையுலகத்தில் தான், "நான் தமிழ்ல அறிமுகமானது விக்ராந்த் நடிச்ச 'தாக்க தாக்க' ஆனா அதுக்கு முன்னாடியே தெலுகுல அலைஸ் ஜானகினு ஒரு படத்துல ஒர்க் பண்ணேன். என்னோட டெபியூட் பிலிம் கூட அது தான். அந்த படம் கூட ரீசெண்டா நந்தி அவார்ட் வாங்குச்சு.

துருவங்கள் பதினாறு திரைப்படத்தின் வெற்றிக்கு பிறகு உங்களின் மறக்கமுடியாத நிகழ்வு?

துருவங்கள் பதினாறு படத்துக்கு நாங்க இவ்ளோ பெரிய ரெஸ்பான்ச எதிர்பார்க்கவே இல்ல. படம் ரிலீசாகி செம ஹிட் ஆச்சு அதுவே மறக்கமுடியாத ஒன்னு தான். படத்தோட சக்ஸஸ் மீட்ல டைரக்டர் கெளதம் மேனன் சார் கார்த்திக் நரேன்கிட்ட என்னோட துருவநட்சத்திரம் திரைப்படத்துல சுஜித் சாரங் ஒர்க் பண்ணமுடியும்ணு கேட்டாரு. அந்த நேரத்துல தெலுங்குல ஒரு படத்துல நான் ஒர்க் பண்ணிட்டு இருந்தேன். எல்லாருமே என்னோட ப்ரெண்ட்ஸ் வேற முதன்முறையா படம் பண்றவங்க அதுனால என்னால கெளதம் மேனன் சாரோட ஒர்க் பண்ண முடியாம போயிருச்சு. கெளதம் மேனன் சார் அவரோட படத்துல என்ன ஒர்க் பண்ண வைக்கனுன்னு நெனைச்சதே ரொம்ப நிறைவா இருந்துச்சு. அது தான் மறக்கமுடியாத நிகழ்வா நினைக்கிறேன்.

துருவங்கள் பதினாறு வெற்றிக்கு பின் உங்களுடைய டீம் அப்படியே இணையும் நரகாசூரன் திரைப்படத்தை பற்றி...
 
dhuruvangal pathinaaru team

"கிட்டத்தட்ட ப்ரீ ப்ரொடக்சன் ஒர்க் எல்லாமே முடிஞ்சுருச்சு. இந்த படம் முழுக்க முழுக்க ஃபாரஸ்ட் ரேஞ்செர்ஸை பற்றிய படம். அதற்காக காடு, மலைகள் எல்லாம் சுத்தி இப்ப ரீசெண்டா தான் லொகேஷன் பாத்துட்டு வந்தோம். இந்த படமும் துருவங்கள் பதினாறு படத்த மாதிரியே கதைக்கு முக்கியத்துவம் உள்ள திரில்லர் தான். ரொம்ப சீக்கிரமே ஷூட்டிங் ஸ்டார்ட் ஆயிரும். இந்த படத்துல அரவிந்த் சாமி, ஸ்ரேயா, மலையாளத்துல ரொம்ப பிரபலமான இந்திரஜித் சுகுமாரன் நடிக்கிறாங்க. வேற எதும் இப்போதைக்கு கேக்காதீங்க" என்று கூறி புன்னகை செய்கிறார் சுஜித்.

நீங்கள் அடுத்தடுத்து பணிபுரியவிருக்கும் படங்களை பற்றி....
 
sujith sarang stunt dheena

பெல்லி சுப்புலு டீம் இப்போ பண்ணிட்டு இருக்க படத்துக்கு நான் தான் சினிமோட்டோகிராஃபி பண்ணிட்டு இருக்கேன். தமிழ்ல நரகாசூரன் படத்துல தான் அடுத்து ஒர்க் பண்றேன். அதுக்கடுத்து ஸ்டண்ட் தீனா சார் ஒரு படம் டைரக்ட் பண்ணலான்னு இருக்காரு. அவரோட ஸ்கிரிப்ட் என்ட சொன்னாரு எனக்கு ரொம்பவே பிடிச்சிருந்தது. ரொம்பவே வித்தியாசமான எக்ஸ்பிரிமெண்டல் ஸ்டோரி தான் அதுவும். நாம எல்லாருக்கும் அவர ஒரு வில்லனா மட்டும் தான் தெரியும் அதையெல்லாம் தாண்டி அவரு ஒரு நல்ல க்ரியேட்டர், நல்ல ஆர்ட்டிஸ்ட். அநேகமா தமிழ்ல என்னோட அடுத்த படம் அவரோட தான் இருக்கும். ஆனா, இன்னும் கன்ஃபார்ம் ஆகல. கூடிய சீக்கிரம் அவர ஒரு நல்ல இயக்குநரா பாக்கலாம். அந்த படத்துக்கும் அண்ணா தான் எடிட்டிங் பண்ணுவாருனு நினைக்கிறேன் என்று தொடர்ச்சியாக தனது அண்ணனுடன் சேர்ந்து பணிபுரியும் மகிழ்ச்சியில் உள்ளார் சுஜித் சாரங்.
 

    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்