முகப்புகோலிவுட்

"சிம்புவுடன் நடிக்க மறுத்தேன்!" - `வடசென்னை' பத்திரிகையாளர் சந்திப்பில் தனுஷ்

  | October 10, 2018 14:33 IST
Dhanush

துனுக்குகள்

  • வெற்றிமாறன் இயக்கத்தில் உருவாகும் படம் `வடசென்னை'
  • தனுஷ் இப்படத்தில் ஹீரோவாக நடித்திருக்கிறார்
  • படம் அக்டோபர் 17ல் வெளியாகிறது
இப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு இன்று நடந்தது. அந்த நிகழ்வில் தனுஷ், "இந்தக் கதையை நிறைய வருடங்களுக்கு முன்பே வெற்றிமாறன் எனக்குக் கூறியிருக்கிறார். `ஆடுகளம்' படத்திற்குப் பிறகு ஒரு இடைவெளி எடுத்துக் கொண்டு மறுபடி இந்தப் படத்தில் இணையலாம் எனப் பேசினோம். பிறகு ஒரு நாள் வெற்றிமாறன் இந்தக் கதையை சிம்புவை வைத்து இயக்கப் போகிறேன் எனக் கூறினார்.

"நான் அந்தப் படத்தில் இல்லை என்றால் அவரைத்தான் நான் யோசிப்பேன். நன்றாக இருக்கும்" எனக் கூறினேன். அதுக்குப் பிறகு மீண்டும் அழைத்து படத்தில், அரை மணிநேரம் வரும் கதாபாத்திரம் ஒன்றில் நடிக்கும் படி அழைத்தார். அன்பு கேரக்டர் சிம்புவும், குமாரு என்ற கேரக்டரில் நானும் நடித்தால் நன்றாக இருக்கும் என சொன்னார்.

"சார் எனக்குப் பெருந்தன்மை இருக்கு. ஆனா, அவ்வளோ பெருந்தன்மை இல்ல" எனக் கூறி எனக்கு அதில் உடன்பாடில்லை, நான் நடிக்கவில்லை எனக் கூறினேன். அதுக்குப் பிறகு சிம்பு `வடசென்னை' படத்தில் நடிக்க முடியாத சூழல். வெற்றிமாறன் அழைத்து என்னிடம் இதைக் கூறினார். பின்பு வேறு ஏதாவது படம் பண்ணலாம் எனப் பேசினோம். பிறகு ஒரு படம் பண்ணிட்டு வர்றேன் எனக் கூறி `விசாரணை' முடித்துவிட்டார். ஒரு வழியாக எங்கெங்கோ சுற்றி மறுபடி இந்தப் படம் எனக்கே வந்ததில் சந்தோசம்." எனப் பேசினார்
 

    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்