விளம்பரம்
முகப்புகோலிவுட்

'பொன்னியின் செல்வன்' நாவலை படமாக்க வேண்டும் - இயக்குநர் அட்லி

  | October 13, 2017 15:00 IST
Atlees Next

துனுக்குகள்

  • ‘ராஜா ராணி’ படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானார் அட்லி
  • ‘மெர்சல்’ தீபாவளி ஸ்பெஷலாக ரிலீஸ் செய்யவுள்ளனர்
  • நடிகர்களும், பட்ஜெட்டும் அமைந்தால் வரலாற்று படம் பண்ணுவேன்
பிரம்மாண்ட இயக்குநர் ஷங்கரின் சீடரான அட்லி, ‘ராஜா ராணி’ படம் மூலம் இயக்குநராக தமிழ் சினிமாவில் அறிமுகமானார். ஆர்யா, நயன்தாரா ஜோடியாக நடித்திருந்த இப்படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது. இதனைத் தொடர்ந்து ‘தளபதி’ விஜய்யை வைத்து ‘தெறி’ எனும் மெகா ஹிட் படத்தை கொடுத்தார் அட்லி.

மேலும், அட்லி தனது சொந்த தயாரிப்பு நிறுவனமான ‘ஏ ஃபார் ஆப்பிள் புரொடக்ஷன்' மூலம் ஜீவாவின் ‘சங்கிலி புங்கிலி கதவ தொற’ படத்தை தயாரிக்கவும் செய்தார். தற்போது, மீண்டும் விஜய்யுடன் ‘மெர்சல்’ படத்திற்காக கூட்டணி அமைத்துள்ளார் அட்லி. இந்த படத்தில் விஜய் முதன்முறையாக ட்ரிபிள் ஆக்ஷனில் நடித்துள்ளாராம்.

இதன் டீஸர் மற்றும் பாடல்கள் ரசிகர்களிடையே செம லைக்ஸ் குவித்து வைரலானது. படத்தை விஜய் ரசிகர்களுக்கு தீபாவளி விருந்தாக ரிலீஸ் செய்யத் திட்டமிட்டுள்ளனர். இந்நிலையில், மீடியாவிற்கு பேட்டியளித்த அட்லி “ஒரு வரலாற்று படம் பண்ண வேண்டும் என்ற ஆசை எனக்கு உள்ளது. அதுவும் ’பொன்னியின் செல்வன்’ நாவலை திரைப்படமாக்க வேண்டுமென்பது எனது நெடுநாள் கனவு. நடிகர்களும், பட்ஜெட்டும் அமைந்தால் நிச்சயம் விரைவில் வரலாற்று படம் பண்ணுவேன்” என்று கூறியுள்ளார்.
    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்