முகப்புகோலிவுட்

"நான் நடிச்ச படத்தை அம்மா, அப்பாவோட சேர்ந்து பார்க்கணும்!" - `டப்ஸ்மாஷ் குயின்' மிருணாளினி

  | February 01, 2018 15:18 IST
Mirnalini Ravi Exclusive Interview

துனுக்குகள்

  • தியாகராஜன் குமாரராஜாவின் `சூப்பர் டீலக்ஸ்' படத்தில் நடிக்கிறார்
  • விஜய் சேதுபதி, ஃபகத் பாசில், சமந்தா, மிஷ்கின் இப்படத்தில் நடிக்கிறார்கள்
  • படத்தில் வித்தியாசமான கதாபாத்திரம் ஒன்றில் நடிக்கிறார் மிருணாளினி
`டப்ஸ்மாஷ் குயின்' விஜய் சேதுபதியுடன் நடிக்கிறார் எனப் பரபரக்கிறது செய்திகள், இயக்குநர் தியாகராஜன் குமாரராஜா மற்றும் படக்குழுவினருடன் 360டிகிரி போட்டோவை மிருணாளினி ஷேர் செய்ததுதான் தாமதம் அன்றைய டிரெண்டிங்கில் மிர்ணாலினியும் இடம் பிடித்தார். `இது எப்போ?' என்கிற ஷாக்குடன் மிருணாளினியைத தொடர்பு கொண்டால், "இது எனக்கே ஷாக்காதான் இருக்கு" எனச் சிரிக்கிறார்.

"என்னங்க, இப்போ எல்லாம் டப்ஸ்மாஷ் பண்றதே இல்ல?" என `மிருணாளினி ஆர்மி' சார்பாக முதல் கேள்வியுடன் ஆரம்பித்தேன். "அது என்ன பண்றது உங்களுக்கே தெரியும் நான் ஐடி கம்பெனியில் வேலை பார்க்கறேன்னு. நான், வேலைக்கு சேர்றதுக்கு முன்னால டப்ஸ்மாஷ் பண்ணத் தொடங்கினேன். அப்போ நிறைய டைம் இருந்தது, டிரைனிங் டைம்ல கூட டைம் கிடைச்சது. இப்போ வேலைகள் அதிகமாகிடுச்சு, அதுக்காக நிர சொல்ல முடியாது I loved to do always. ஆனா, இப்பவும் அதன் மூலமா எனக்குக் கிடைச்ச வாய்ப்புகள் எல்லாம் நான் கொஞ்சமும் எதிர்பார்க்காதது. நடிப்பில் ஆர்வம் இருந்ததால நம்ம புரொஃபைல்ல ஏதாவது பண்ணலாமேனு ஆரம்பிச்ச டப்ஸ்மாஷ், இப்போ நடிச்சு முடிச்சிருக்க `சூப்பர் டீலக்ஸ்' வரை கொண்டு வந்திருக்குன்றது ஆச்சர்யமா இருக்கு"
 
mirnalini ravi

"நீங்க நடிக்கத் துவங்கின `நகல்' படம் எந்த நிலைல இருக்கு?"

"அது இன்னும் கொஞ்சம் ஷுட்டிங் பாக்கி இருக்கு. தியாகராஜன் குமாரராஜா சார் இயக்கத்தில் நடிச்சிருக்கும் `சூப்பர் டீலக்ஸ்' ஷூட்டிங் முடிஞ்சது, என்னோட அறிமுகப்படமா இதுதான் இருக்கும்னு நினைக்கறேன்."
"எப்படி கிடைச்சது தியாகராஜன் குமாரராஜா பட வாய்ப்பு?"

"திடீர்னு ஒருநாள் குமாரராஜா சார் ஆஃபீஸ்ல இருந்து கால் வந்தது. ஸ்க்ரீன் டெஸ்ட்டுக்குக் கூப்பிட்டாங்க. எனக்கு வாய்ப்பு கிடைக்கும்னு நினைச்சுப் போகல. சரி கூப்பிட்டிருக்காங்கனு கலந்துகிட்டேன், நடிக்கறதைப் பார்த்திட்டு ஓகேனு சொன்னதுக்குப் பிறகு குமாரராஜா சாரைப் பார்த்தேன். கதையை சொன்னார், எனக்கு ரொம்பப் பிடிச்சிருந்தது. அடுத்த ஒருவாரத்தில் படத்தில் நான் இருக்கேன்னு சொன்னாங்க. ஆனா எனக்கு அதைப் பற்றி வெளிய சொல்லணும்னு தோணல. ஷுட் முடிஞ்ச பின்னாலதான், நான் அந்தப் படத்தில் நடிச்சிருக்கறதையே வெளிய சொன்னேன்."

"என்ன மாதிரி ரோல்ல நடிச்சிருக்கீங்க?"

"கண்டிப்பா வழக்கமான கதாபாத்திரம் கிடையாது. வேற மாதிரி ஒரு சுவாரஸ்யமான ரோலா இருக்கும்."
 
" `சூப்பர் டீலெக்ஸ்' படத்தில் நடித்த அனுபவம் எப்படி இருந்தது?"

"நான் இந்தப் படத்தில் நடிச்சிருக்கேன்னு போட்டோ போட்டதும், என்னுடை ஃப்ரெண்ட்ஸ் எல்லாரும் `வாவ்... அவரோட படமா!', `சூப்பர்'னு கமெண்ட்ஸ் எழுத ஆரம்பிச்சாங்க. அப்போதான் இதனுடைய தீவிரம் எனக்குப் புரிய ஆரம்பிச்சது. அத்தனை திறமையான நடிகர்கள் இருக்கும் படம், தியாகராஜன் குமாராராஜா மாதிரி ஒரு இயக்குநர் கூட வேலை பார்க்கறதுன்னு இது எனக்குப் பெரிய வாய்ப்பு. குமாரராஜா சார் ரொம்ப ஆர்கனைஸ்டான ஆள், பர்ஃபெக்ஷனா இருக்கணும்னு நினைப்பார். அவருக்கு என்ன வேணும்னு அவருக்குத் தெரியும். ஷாட் ஒகேன்னா, சூப்பர், இல்லன்னா ரீடேக். மத்தபடி சூப்பரா பண்ணீங்கனுலாம் எதுவும் சொல்லலமாட்டார். அவர்கிட்ட இருந்து நிறைய கத்துக்க முடிஞ்சது."

"அந்தப் படத்தில் நிறைய பெரிய ஸ்டார்ஸ் எல்லாம் நடிச்சிருக்காங்களே, அவங்களை சந்திச்சிங்களா?"

"நான் நடிச்சது வேற போர்ஷன்ங்கறதால, விஜய் சேதுபதி சார், ஃபகத் பாசில் சார், சமந்தா மேம், மிஷ்கின் சார்னு யாரையும் சந்திக்க வாய்ப்பு கிடைக்கல."
 
mirnalini ravi

"டப்ஸ்மாஸ் டூ மாஸ்மீடியம் இந்த மாற்றத்தை எப்படி உணர்றீங்க?"

"டப்ஸ்மாஷ் பண்ணும் போது நான்தான் நடிகை, கேமரா மேன், எடிட்டர், டைரக்டர் எல்லாமே. எனக்குப் புடிச்சிருந்தா பண்ணுவேன். ஆனா, சினிமால நடிகை மட்டும்தான். என்ன பண்ணனும், எந்த பக்கம் பாக்கணும்னு எல்லாம் இயக்குநர் சொல்றதைப் பொறுத்தது. சின்ன வயசில் கேள்வி பதில் எல்லாம் மனப்பாடம் பண்ணுவோம்ல, அந்த மாதிரி நம்மளுடைய கதாபாத்திரத்தைப் மனசில் ஏத்திகிட்டு பெர்ஃபாம் பண்ணனும். இந்த மாற்றத்தை நல்ல அனுபவமா பார்க்கறேன்."

"வீட்ல நடிக்கப் போறேன்னு சொன்னப்போ என்ன ரியாக்ட் பண்ணாங்க?"

"முதல்ல எல்லார் வீட்ல மாதிரியும் வேணாம், எதுக்குத் தெரியாத ஃபீல்டுக்குப் போயிட்டுனு சொன்னாங்க. ஆனா, என்னோட ஆர்வத்தைப் புரிஞ்சுகிட்ட பிறகு, உன்னோட பர்சனல் வாழ்க்கைய பாதிக்காம பாத்துக்கோனு மட்டும் சொன்னாங்க. அவங்களுக்குதானே என்னோட வாழ்க்கை பற்றி அதிக அக்கரை இருக்கும். நான் கண்டிப்பா அவங்க பெருமைபடும் படியா நடந்துப்பேன். `சூப்பர் டீலெக்ஸ்' ரிலீஸ் ஆனதும், அம்மா - அப்பாவ கூட்டிட்டுப் போய் காமிக்கணும்."

"இனிமே நடிப்புதானா?"

"இப்போதைக்கு வேலை செய்துகிட்டே நடிப்பையும் தொடரலாம்னு இருக்கேன். எங்க ஆஃபீஸ்ல என்னுடைய முயற்சிகளுக்கு நிறைய ஆதரவு கொடுக்கறாங்க, அவங்க எல்லாருக்கும் நான் நன்றி சொல்லணும். அந்த ஆதரவு இல்லாம போனா ஒரு பிக் டெஷிஷன் எடுக்க வேண்டியிருக்கும். மத்தபடி இந்த டிராவல் பத்தி எந்தப் ப்ளானும் இல்ல. சினிமான்னா நாம ப்ளான் பண்ணி எதுவும் நடக்காதில்ல, இப்போதைக்கு எல்லாம் நல்லா போகுது, ஐம் ஹேப்பி."
 

    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்