விளம்பரம்
முகப்புகோலிவுட்

நிச்சயமாக திரைப்படம் இயக்குவேன் - சுருதி ஹாஸன்

  | July 11, 2017 16:31 IST
Celebrities

துனுக்குகள்

  • உன்னை போல் ஒருவன் திரைப்படத்தில் இசையமைப்பாளராக அறிமுகமாகினார்
  • நான் சரியாகவோ தவறாகவோ எது செய்தியாலும் அதற்கு நான் தான் பொறுப்பு
  • நான் இன்னும் என் நடிப்பில் திருப்தி அடையவில்லை
நடிகை சுருதிஹாசன் தனது திரையுலக அனுபவம் குறித்து சமீபத்தில் பத்திரிக்கையாளர்களுக்கு பேட்டி அளித்தார். அதில் அவர் கூறியதாவது…

ஒரு இசையமைப்பாளராக உருவாக வேண்டும் என்று ஆசைப்பட்டு அதற்க்காகவே படித்து இசை துறையில் "உன்னை போல் ஒருவன்" என்ற திரைப்படம் மூலம் அறிமுகமானேன் ஆனால் காலச்சூழ்நிலை என்னை நடிகை ஆக்கிவிட்டது. அப்பா இதுவரை எனக்கு எந்த சிபாரிசும் யாரிடமும் செய்தது இல்லை. நான் சரியாகவோ தவறாகவோ எது செய்தியாலும் அதற்கு நான் தான் பொறுப்பு.

விதம் விதமான கதாபாத்திரங்களில் நடித்து அப்பா சாதித்து காட்டியுள்ளார். நான் இதுவரை அப்படி எதுவும் சாதிக்கவில்லை. ஆனால் நிச்சயம் அந்த இலக்கை அடையவேண்டும் என்ற எண்ணம் எனக்கு உள்ளது.
படம் இயக்கம் எண்ணம் தற்போது இல்லை ஏனென்றால் இயக்குனர் என்பது பெரிய பொறுப்பு. அப்படி ஒரு வாய்ப்பு கிடைக்கும் பட்சத்தில் நிச்சயம் தவறவிடமாட்டேன்.

அதுமட்டுமல்லாமல் நான் இன்னும் என் நடிப்பில் திருப்தி அடையவில்லை. தெலுகு திரை உலகில் பலவிதமான விமர்சனங்கள் வந்தாலும் எனக்கு எல்லாம் கிடைத்து உள்ளது. அடுத்து என் தகுதியை மேலும் வளர்த்து கொள்ள வேண்டும்.

என்னுடைய தங்கையும் முதல் தமிழ் படத்தில் நடிப்பது மிக்க மகிழ்ச்சி. என்று அவர் கூறியுள்ளார்.

    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்