விளம்பரம்
முகப்புகோலிவுட்

தமிழ் ராக்கரஸுக்கே சவால் விடும் smule - காப்பிரைட்டை வைத்து முடக்கிய இளையராஜா

  | September 26, 2017 20:45 IST
Ilaiyaraaja Legal Notice

துனுக்குகள்

  • அடுத்தவன் உழைப்பை திருடி சம்பாதிக்கும் செயலி
  • திருட்டுத்தனமாக சந்தைப்படுத்துவதற்கு யாரிடமும் அனுமதி பெறுவதில்லை
  • இதனை கண்டித்து அனைத்து இசையமைப்பாளர்களும் களமிறங்க வாய்ப்புண்டு
இணையத்தில் தற்போது சூடான விவாதப்பொருளாக இருப்பது smule செயலியில் இளையராஜாவின் பாடல்கள் கிடைக்காமல் செய்யும் அவரது copyright claim.

இளையராஜா அவர்கள் smule செயலி மீது தொடுத்திருக்கும் போர் பல நாட்களுக்கு முன்பே நடந்திருக்க வேண்டிய ஒன்று, தற்போது காலம் கடந்து நடந்திருக்கிறது பிற இசையமைப்பாளர்களும் இளையராஜாவை தொடர்ந்து களமிறங்கவும் வாய்ப்பிருக்கிறது.

விளையாட்டாக மக்கள் Smule செயலியில் உள்ள karaoke இசையில் பாடி மகிழ்ந்தாலும், smule முழுக்க முழுக்க அடுத்தவன் உழைப்பை திருடி பணம் சம்பாதிக்கும் அடிப்படையில் தான் இயங்குகிறது.
இசையமைப்பாளர், பாடலாசிரியர், பாடகர்கள் வாசிப்பாளர்கள், தயாரிப்பாளர் என பலரின் உழைப்பால் உருவாகும் இசையை திருட்டுத்தனமாக பதிவிறக்குவது மட்டுமன்றி அதை காசை வாங்கிக்கொண்டு பிறருக்கு விற்பது எத்தனை பெரிய சுரண்டல்.

அவர்களின் படைப்பை இப்படி திருட்டுத்தனமாக சந்தைப்படுத்த அவர்களிடம் எவ்வகையிலும் முன்னனுமதி பெறுவதில்லை என்பது தான் அதிர்ச்சிகரமான உண்மை.

தமிழ் ராக்கர்ஸ் அதன் திருட்டு பிரிண்ட்டுகளை காசு கொடுத்து பதிவிறக்க சொன்னால் எத்தனை மொள்ளமாறித்தனமாக இருக்குமோ அதைத்தான் smule இத்தனை நாளாக சத்தமே இல்லாமல் செய்து வந்திருக்கிறது.

நியாயமாக Smule அதன் லாபத்தின் ஒரு பங்கை அதன் உண்மையான உரிமையுள்ளவர்களிடம் பகிர்ந்துகொள்ள வேண்டும்.
அது வரையில் அதில் தங்கள் பாடல்கள் வராமல் தடுப்பதே வளர்ந்த இசையமைப்பாளர்களுக்கு பயன் தரும் முடிவாக இருக்கும்.

இசை வாசிப்பாளர்கள், பாடகர்கள், பாடலாசிரியர்கள், ஒலி வடிவமைப்பாளர்கள் என பலருக்கு இந்த copyright கிளைய்ம்களின் மூலம் சீரான வருமானம் வரும் வகையில் AR Rahman தனது பாடல்களின் அனைத்து காப்பிரைட் உரிமைகளையும் தன்னிடமே வைத்துக்கொள்கிறார்.
இளையராஜா அவர்கள் maestros மியூசிக் எனும் செயலி மூலம் தான் பாடல்களையும் அதை வர்த்தக நோக்கில் பாடும் பிறரது இசை நிகழ்வுகளையும் ஒரே குடையில் தொகுக்கிறார்.

காப்பிரைட் என்பது நாம் ரசிக்கும் கலைபொருட்களை உருவாக்கிய கலைஞர்களை காப்பாற்றும் ஒரு முக்கிய ஆயுதம், கலைஞர்கள் வாழ்ந்தால் மட்டுமே கலை வாழும்.

காப்பிரைட்டை இனிமேலும் தவறான பார்வையில் மட்டுமே பார்க்கவேண்டமே...
 

    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்