முகப்புகோலிவுட்

விஷ்ணு விஷால் படத்தின் ஷூட்டிங்கில் கலந்து கொண்ட 'இளைய திலகம்'

  | August 02, 2018 16:30 IST
Vishnu Vishal

துனுக்குகள்

  • விஷ்ணு விஷால் கைவசம் 6 படங்கள் உள்ளது
  • இதில் விஷ்ணுவுக்கு ஜோடியாக ஷிவானி நடிக்கிறார்
  • இதன் ஷூட்டிங் பரபரப்பாக நடைபெற்று வருகிறது
முருகானந்தமின் ‘கதாநாயகன்’ படத்திற்கு பிறகு நடிகர் விஷ்ணு விஷால் கைவசம் ராமின் ‘ராட்சசன்’, செல்லா அய்யாவுவின் ‘சிலுக்குவார்பட்டி சிங்கம்’, எழிலின் ‘ஜகஜால கில்லாடி’, பிரபு சாலமனின் ‘காடன்’, வெங்கடேஷ் ராதாகிருஷ்ணன் படம், தனுஷ் தயாரிக்கும் படம் என 6 படங்கள் உள்ளது. இதில் அறிமுக இயக்குநர் வெங்கடேஷ் ராதாகிருஷ்ணன் இயக்கி வரும் படத்தில் விஷ்ணுவுக்கு ஜோடியாக பிரபல நடிகர் ராஜசேகரின் மகள் ஷிவானி டூயட் பாடி ஆடி வருகிறார்.

மேலும், முக்கிய வேடங்களில் ‘இளைய திலகம்’ பிரபு, சரண்யா பொன்வண்ணன், ராம்தாஸ், சிங்கம் புலி, பிரவீன், மொட்ட ராஜேந்திரன் ஆகியோர் நடிக்கின்றனர். பாடகர் க்ரிஷ் இசையமைக்கும் இதற்கு ஸ்ரீதர் ஒளிப்பதிவு செய்கிறார். இதனை விஷ்ணுவே தனது சொந்த தயாரிப்பு நிறுவனமான ‘விஷ்ணு விஷால் ஸ்டுடியோஸ்’ மூலம் தயாரிக்கிறார்.
 
சமீபத்தில், துவங்கிய இதன் ஷூட்டிங் பரபரப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், இன்று (ஆகஸ்ட் 2-ஆம் தேதி) முதல் படத்தின் ஷூட்டிங்கில் ‘இளைய திலகம்’ பிரபுவும் கலந்து கொண்டதாக தகவல் வெளியாகியுள்ளது. இதை விஷ்ணுவே தனது ட்வீட்டர் பக்கத்தில் ஸ்டேட்டஸாகத் தட்டியதோடு, ஷூட்டிங் ஸ்பாட்டில் பிரபுவுடன் எடுத்து கொண்ட புகைப்படங்களையும் ஷேரிட்டு உறுதிபடுத்தியுள்ளார். வெகு விரைவில் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் டீசர் ரிலீஸ் ப்ளான் குறித்த அப்டேட்ஸ் ட்வீட்டப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்