முகப்புகோலிவுட்

நயன்தாராவின் 'இமைக்கா நொடிகள்' மேக்கிங் வீடியோ

  | September 11, 2018 17:05 IST
Imaikkaa Nodigal

துனுக்குகள்

  • அதர்வாவுக்கு ஜோடியாக ராஷி கண்ணா டூயட் பாடி ஆடியிருந்தார்
  • அனுராக் காஷ்யப் ‘ருத்ரா’ எனும் வில்லன் கதாபாத்திரத்தில் மிரட்டியிருந்தார்
  • ரசிகர்களிடையேவும், விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது
‘டிமான்ட்டி காலனி’ புகழ் அஜய் ஞானமுத்து இயக்கிய ‘இமைக்கா நொடிகள்’ திரைப்படம் சமீபத்தில் வெளியானது. இப்படத்தில் அதர்வாவுக்கு ஜோடியாக ராஷி கண்ணா டூயட் பாடி ஆடியிருந்தார். பவர்ஃபுல்லான வேடத்தில் நயன்தாரா நடித்திருந்தார். பாலிவுட்டின் மோஸ்ட் வான்டட் இயக்குநர் அனுராக் காஷ்யப் ‘ருத்ரா’ எனும் வில்லன் கதாபாத்திரத்தில் மிரட்டியிருந்தார்.

‘மக்கள் செல்வன்’ விஜய் சேதுபதி கெஸ்ட் ரோலில் நடித்திருந்தார். ஹிப் ஹாப் தமிழா இசையமைத்திருந்த இதற்கு பட்டுக்கோட்டை பிரபாகர் வசனம் எழுதியிருந்தார், ஆர்.டி.ராஜசேகர் ஒளிப்பதிவு செய்திருந்தார், புவன் ஸ்ரீநிவாசன் படத்தொகுப்பாளராக பணியாற்றியிருந்தார். ‘கேமியோ ஃபிலிம்ஸ்’ நிறுவனம் சார்பில் சி.ஜே.ஜெயக்குமார் பிரம்மாண்டமாக தயாரித்திருந்தார்.
 

இப்படம் ரசிகர்களிடையேவும், விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்நிலையில், இந்த படத்தின் மேக்கிங் வீடியோ வெளியிடப்பட்டுள்ளது.

    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்