முகப்புகோலிவுட்

ஷூட்டிங்கை நிறைவு செய்த 'இமைக்கா நொடிகள்' டீம்

  | July 11, 2018 11:33 IST
Imaikkaa Nodigal

துனுக்குகள்

  • அதர்வாவுக்கு ஜோடியாக ராஷி கண்ணா டூயட் பாடி ஆடியுள்ளார்
  • பாலிவுட் இயக்குநர் அனுராக் காஷ்யப்பிற்கு வில்லன் கதாபாத்திரமாம்
  • இதன் டிரெய்லர் & பாடல்கள் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது
‘செம போத ஆகாதே’ படத்திற்கு பிறகு அதர்வா நடிப்பில் உருவாகி வரும் படம் ‘இமைக்கா நொடிகள்’. அஜய் ஞானமுத்து இயக்கும் இப்படத்தில் அதர்வாவுக்கு ஜோடியாக ராஷி கண்ணா டூயட் பாடி ஆடியுள்ளார். பவர்ஃபுல்லான வேடத்தில் நயன்தாரா நடித்துள்ளார். பாலிவுட்டின் மோஸ்ட் வான்டட் இயக்குநர் அனுராக் காஷ்யப்பிற்கு ‘ருத்ரா’எனும் வில்லன் கதாபாத்திரமாம்.

‘மக்கள் செல்வன்’ விஜய் சேதுபதி கெஸ்ட் ரோலில் நடித்துள்ளாராம். இதில் விஜய் சேதுபதிக்கு ஜோடி நயன்தாராவாம். ஹிப் ஹாப் தமிழா இசையமைத்து வரும் இதற்கு பட்டுக்கோட்டை பிரபாகர் வசனம் எழுதியுள்ளார், ஆர்.டி.ராஜசேகர் ஒளிப்பதிவு செய்கிறார், புவன் ஸ்ரீநிவாசன் படத்தொகுப்பாளராக பணியாற்றுகிறார். ‘கேமியோ ஃபிலிம்ஸ்’ நிறுவனம் சார்பில் சி.ஜே.ஜெயக்குமார் பிரம்மாண்டமாக தயாரித்து வருகிறார்.

சமீபத்தில், வெளியிடப்பட்ட படத்தின் டீசர், டிரெய்லர் மற்றும் பாடல்கள் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது. அதுமட்டுமின்றி, படத்தின் மீதான எதிர்பார்ப்பையும் அதிகரிக்கச் செய்தது. தற்போது, இந்த படத்தின் ஷூட்டிங் வெற்றிகரமாக நிறைவு பெற்றதாக அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகியுள்ளது. வெகு விரைவில் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்படுமாம்.
    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்