விளம்பரம்
முகப்புகோலிவுட்

சூப்பர் ஸ்டாரின் ரசிகர்கள் சந்திப்பும் சில சுவாரஷ்ய நிகழ்வுகளும்

  | May 18, 2017 15:12 IST
Celebrities

துனுக்குகள்

  • தினமும் 750 ரசிகர்களை சந்திக்கிறார் ரஜினி
  • காத்திருந்த ரசிகர்களை திடீரென சந்தித்த ரஜினி
  • ரஜினியின் அரசியல் கருத்து பெரும் விவாதத்தை உண்டாக்கி உள்ளது
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் சென்ற 15-ந் தேதி முதல் ரசிகர்களை சந்தித்து அவர்களுடன் புகைப்படமும் எடுத்து வருகிறார்.

சென்னை கோடம்பாக்கத்தில் உள்ள ராகவேந்திரா திருமண மண்டபத்தில் நடந்து வரும் இந்த சந்திப்பில், முதல் கட்டமாக 15 மாவட்டத்தை சார்ந்த ரசிகர்களை சந்தித்து வருகிறார். தினமும் 3 மாவட்டங்களை சேர்ந்த சுமார் 750 ரசிகர்களை ரஜினி சந்தித்து அவர்களுடன் புகைப்படமும் எடுத்து வருகிறார்.

ஒரு மாவட்டத்துக்கு சராசரியாக 250 பேர் விகிதம் ரஜினியுடன் புகைப்படம் எடுத்துக் கொள்ள அடையாள அட்டை உடன் அனுமதிக்கப்படுகிறார்கள்.
சந்திப்பு நிகழ்ச்சியின் முதல் நாளில் கன்னியாகுமரி, திண்டுக்கல், கரூர் மாவட்ட நிர்வாகிகளுடனும், 2-வது நாள் திருநெல்வேலி, தூத்துக்குடி, தேனி மாவட்டங்களை சேர்ந்த ரசிகர்களுடனும், 3-வது நாளான இன்று விழுப்புரம், திருவண்ணாமலை, சிவகங்கை மாவட்டங்களை சேர்ந்த ரசிகர்களை சந்தித்தார்வ 4 வது நாள் இன்று கடலூர், தஞ்சாவூர், பாண்டிச்சேரி, காரைக்கால் மாவட்ட ரசிகர்களை ரஜினி சந்தித்தார்.
 
rajinikanth

நேற்று ரஜினியை சந்திப்பதற்காக அடையாள அட்டையுடன் வந்த 3 மாவட்டங்களையும் சார்ந்த 750 ரசிகர்களும் ஸ்ரீ ராகவேந்திரா மண்டபத்தின் உள்ளே, இருக்கைகளில் உட்கார வைக்கப்பட்டனர். அவரவர் வரிசை எண்களின்படி அவர்கள் ரஜினியை சந்திக்க தயாராக இருந்தனர்.
இந்த சூழ்நிலையில் அடையாள அட்டை இல்லாத ஏராளமான ரசிகர்கள் சூப்பர் ஸ்டார் ரஜினியை பார்ப்பதற்காக ராகவேந்திரா மண்டபத்துக்கு வெளியே கூடி நின்றனர். சூப்பர் ஸ்டார் ரஜினி காந்த் இந்த வழியாக போகும் போது எப்படியாவது பார்த்து விடலாம் என்று காத்து இருந்த ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி காத்திருந்தது.

காலை 8.55 மணிக்கெல்லாம் ராகவேந்திரா மண்டபத்துக்கு வந்து கொண்டிருந்த ஒரு இன்னோவா கார் திடீரென்று நடு ரோட்டில் நின்றது. அந்த காரில் இருந்து இறங்கி வந்த சூப்பர் ஸ்டார் ரஜினி காந்த் கூடி நின்ற ரசிகர்களை திடீரென்று சந்தித்து அவர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்தார். அவரை கண்டதும் ரசிகர்கள், பெரும் மகிழ்ச்சியில் ‘சூப்பர் ஸ்டார் வாழ்க’, ‘தலைவர் ரஜினி வாழ்க’ என்று உரக்க கோஷமிட்டனர்.

அவர்களை சமாதானப்படுத்திய சூப்பர் ஸ்டார், “நீங்கள் என்னை பார்க்க வந்தது மகிழ்ச்சி” என்று கூறியபடி அனைவருக்கும் வணக்கம் சொல்லிவிட்டு பின்னர் கைகளை அசைத்தார். அப்போது ரசிகர்கள் பெரும் ஆரவாரம் செய்தனர். சிறிது நேரம் ரசிகர்களின் மத்தியில் நின்று பேசிக்கொண்டிருந்த ரஜினி காந்த் பின்னர் காரில் ஏறி மண்டபத்துக்கு உள்ளே சென்றார்.

அங்கு அவருக்காக காத்திருந்த ரசிகர்கள் ஒவ்வொருவராக மேடைக்கு சென்று சூப்பர் ஸ்டார் ரஜினியுடன் புகைப்படம் எடுத்துக் கொண்டனர். இரண்டாம் நாளில் மாற்று திறனாளிகளுடன் புகைப்படம் எடுத்துக்கொண்ட சூப்பர் ஸ்டார், நேற்று ரசிகர் ஒருவர் அவரது மகனுடன் புகைப்படம் எடுக்க வந்தார். அந்த சிறுவனை ரஜினி தனது மடியில் உட்கார வைத்துக் கொண்டார். இன்றும் ரசிகர் ஒருவர் தனது பெண் குழந்தையுடன் வர அந்த குழந்தையும் மடியில் வைத்துக்கொண்டு புகைப்படம்
எடுத்துக்கொண்டார்.
 
rajinikanth

ரஜினியுடன் புகைப்படம் எடுத்துக் கொண்ட அனைவருக்கும் சிறிது நேரத்தில் புகைப்படங்கள் வழங்கப்பட்டன. ரசிகர்கள் அனைவருக்கும் மதிய உணவுவும் ஏற்பாடு செய்ப்பட்டிருந்தது.

19-ந் தேதி வரை (நாளை) முதல் கட்ட சந்திப்பு நடக்கிறது. 2-வது கட்டமாக அடுத்த மாதம் சந்திப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்