முகப்புகோலிவுட்

“இந்த கணத்துக்காகத்தான் காத்திருந்தோம்!” - ‘பேட்ட’ குறித்து கார்த்திக் சுப்பராஜ் பேட்டி

  | January 10, 2019 13:09 IST
Petta

துனுக்குகள்

  • ரசிகர்களுடன் படம் பார்ப்பது நல்ல அனுபவம், கார்த்திக்
  • ரஜினி சாரின் எனர்ஜி மெர்சலாக்கியது, கார்த்திக்
  • பெரிய ஹீரோக்கள் படம் ஒரேநாளிவல் வந்துள்ளது கொண்டாட்டமே, கர்த்திக்
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் இன்று உலகம் முழுக்க வெளியாகியுள்ள திரைப்படம் ‘பேட்ட'. விஜய் சேதுபதி, பாபி சிம்ஹா, சிம்ரன், த்ரிஷா, நவாசுதீன் சித்திக் என்ற பெரும் நட்சத்திரப் பட்டாளமே நடித்துள்ள இந்தப் படத்தை இயக்கியுள்ளார் கார்த்திக் சுப்பராஜ். இன்று அதிகாலையிலேயே ‘பேட்ட' சிறப்பு காட்சிகள், பல திரையரங்குகளில் போடப்பட்டுள்ளன. இதனால், நேற்றிரவு முதலே திரையரங்குகளில் பெரும் அளவிலான ரஜினி ரசிகர்கள் குவியத் தொடங்கியுள்ளனர்.

இந்நிலையில், கார்த்திக் சுப்புராஜிடம் ஒரு ‘ரேபிட் ஃபயர் பேட்டி'

“ரசிகர்களுடன் படத்தைப் பார்த்தீர்களா..?”

“இந்தப் படத்தின் முதல் நாள் படப்பிடிப்பில் இருந்து இன்று வரை நாங்கள் அனைவரும் எதிர்பார்த்துக் காத்திருந்தது, ரிலீஸுக்குத்தான். படம் வெளியான பின்னர் அதை ரசிகர்கள் மத்தியில் அமர்ந்து பார்ப்பதற்காகத்தான் எல்லோரும் தவமிருந்தோம். நாங்கள் பல இடங்களில் ரசிகர்களின் ஆரவாரத்தைப் பார்த்து மிரட்சியடைந்துள்ளோம். நான் பார்த்த தியேட்டரில் மட்டுமல்ல, படம் வெளியான அனைத்துத் திரையரங்குகளிலும் நல்ல ரெஸ்பான்ஸ் வந்து கொண்டிருக்கிறது”

“ரஜினி ரசிகராக இருந்த நீங்கள் அவரையே வைத்தே படம்  இயக்கியுள்ளீர்களே… அது பற்றி..?”
“நான் மிகவும் பதற்றமடைந்தேன். ஒரு ரசிகனாக, மிகவும் ஆரவாரமாக தலைவர் படத்தைப் பார்ப்பேன். நானே இயக்கும்போது, ரசிகர்கள் எப்படி காட்சிகளுக்கு ரியாக்ட் செய்வார்கள் என்பது குறித்து யோசித்துக் கொண்டே இருந்தேன். ஆனால், படம் பார்த்து முடித்தப் பிறகும், அதற்கு ரசிகர்கள் கொடுத்து வரும் பேராதரவும் என்னை சிலிர்க்க வைத்துள்ளது”
 

07taviqg


“ரஜினியிடம் நீங்கள் ஒரு தனிப்பட்ட ‘எனர்ஜி'-யைக் கொண்டு வர முயன்றீர்களா..?”

“அப்படியெல்லாம் இல்லை. தலைவரே, படத்துக்குப் படம் மிகவும் வித்தியாசமான கேரக்டர்களைத்தான் தேர்ந்தெடுக்கிறார். கதைக்கு என்ன தேவையோ அதைத்தான் அவர் செய்ய முயல்கிறார். ‘பேட்ட' திரைக்கதைக்கு ஒரு அடாவடியான எனர்ஜியை கொண்ட  கதாநாயகன் தேவைப்பட்டார். அதேபோல் தலைவர்  புகுந்து விளையாடியுள்ளார்”
 

m3fahjf8


“இளம் இயக்குநரான உங்களை ரஜினி எப்படி அணுகினார்?”

“அவர் மாதிரி ஒரு உழைப்பாளியை நான் பார்த்ததில்லை. ஒரு புதிய நடிகருக்கு இருக்கும் எனர்ஜி தலைவரிடம் இருக்கிறது. தனது ரசிகர்களை அவர் மிகவும் மதிக்கிறார். அவர்களுக்கு வெறுமனே ஒரு படத்தைத் தந்துவிடக் கூடாது என்பதில் மிகவும் கவனமாக இருக்கிறார். ஒவ்வொரு காட்சிக்கும் அவர் அதிக மெனக்கெடல் எடுத்துக் கொண்டார். இந்தப் படத்தைப் பொறுத்தவரை நான் கணத்துக்கு கணம் படப்பிடிப்பின் போது அனுபவித்து வேலை செய்தேன்”
 

27b0nmio


“அனிருத்-ஐ இசையமைப்பாளராக தேர்ந்தெடுத்ததன் பின்னணி?”

“அது ஒரு கூட்டு முடிவுதான். அனிருத் இந்தப் படத்திற்காக அதிகமாக உழைத்து, சிறப்பான அவுட்புட்டைத் தந்துள்ளார். பாடல்களாகட்டும், பின்னணி இசையாகட்டும் இரண்டிலும் அனிருத் சிறப்பான பங்கை செலுத்தியுள்ளார். எனக்கும் அவருடன் வேலை செய்தது மிகவும் மகிழ்ச்சியாகவே இருந்தது”.


“மீண்டும் ரஜினியோட இணைய வாய்ப்புள்ளதா..?”

“இப்போதைக்கு அந்த மாதிரி திட்டம் எதுவும் இல்லை. பேட்ட படத்தின் மீதுதான் எங்களது முழு கவனமும் இருந்தது. முதல் நாள் படப்பிடிப்பு முதல் டப்பிங் வரை தலைவர் மிகையான உழைப்பைக் கொடுத்துள்ளார். அவருக்கு, இந்தப் படம் நல்ல படியாக வெளியாக வேண்டும் என்றுதான் எண்ணம் இருந்தது”
 

o9u7g1o8


“அஜித் ரசிகர்களுக்கு உங்கள் மெஸேஜ்?”

“பொங்கல் என்றாலே கொண்டாட்டம்தான். இந்த முறை பொங்கலுக்கு கூடுதலான விடுமுறைக் காலம் வேறு இருக்கிறது. ஆகவே, இரண்டு பெரிய ஹீரோக்களின் திரைப்படம் வெளிவந்து, வெற்றிகரமாக ஓடுவதற்கு எல்லா சூழலும் இருக்கிறது. எனவே, இரு தரப்பு ரசிகர்களும் கொண்டாட வேண்டிய நேரமிது என நினைக்கிறேன்”

ரஜினி ஃபீவர் பரவிக் கொண்டிருக்கும் நிலையில், ‘பேட்ட'-யின் இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு அளித்தப் பேட்டியிலிருந்து….


மேலும் படிக்க -‘கனவை நனவாக்கியதற்கு நன்றி…' - ‘பேட்ட' பற்றி உருகும் சிம்ரன்    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்