விளம்பரம்
முகப்புகோலிவுட்

விஷால் Vs அர்ஜுன் - ‘இரும்புத்திரை’ படத்தின் மிரட்டலான டிரெய்லர்

  | May 05, 2018 22:39 IST
Vishal Irumbu Thirai

துனுக்குகள்

  • இதில் விஷாலுக்கு ஜோடியாக சமந்தா டூயட் பாடி ஆடியுள்ளார்
  • இதன் பாடல்கள் மற்றும் டீசர் நல்ல வரவேற்பை பெற்றது
  • இப்படத்தில் ‘ஆக்ஷன் கிங்’ அர்ஜுன் வில்லன் வேடத்தில் நடித்துள்ளார்
கோலிவுட்டில் மிஷ்கினின் ‘துப்பறிவாளன்’ படத்தின் வெற்றிக்கு பிறகு விஷால் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘இரும்புத்திரை’. பி.எஸ்.மித்ரன் இயக்கியுள்ள இதில் விஷாலுக்கு ஜோடியாக சமந்தா டூயட் பாடி ஆடியுள்ளார். விஷாலுக்கு எதிராக மோதும் மிரட்டலான வில்லன் வேடத்தில் ‘ஆக்ஷன் கிங்’ அர்ஜுன் நடித்துள்ளார்.

மேலும், முக்கிய கதாபாத்திரங்களில் ரோபோ ஷங்கர், டெல்லி கணேஷ் நடித்துள்ளனர். யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ள இதற்கு ஜார்ஜ்.சி.வில்லியம்ஸ் ஒளிப்பதிவு செய்துள்ளார், ரூபன் படத்தொகுப்பாளராக பணியாற்றியுள்ளார். விஷால் தனது சொந்த தயாரிப்பு நிறுவனமான ‘விஷால் ஃபிலிம் ஃபேக்டரி’ மூலம் தயாரித்துள்ளார். சமீபத்தில், வெளியிடப்பட்ட ஃபர்ஸ்ட் லுக் டீசர் மற்றும் பாடல்கள் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது.
 

படத்தை பார்த்த சென்சார் குழுவினர் கிளீன் ‘யு’ சான்றிதழ் அளித்துள்ளனராம். தற்போது, படத்தின் டிரெய்லரை விஷால் தனது ட்வீட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இந்த டிரெய்லர் ரசிகர்களிடையே செம லைக்ஸ் குவித்து வைரலாகி வருகிறது. அதுமட்டுமின்றி, படத்தின் மீதான எதிர்பார்ப்பையும் எகிற வைத்துள்ளது. படத்தை வருகிற மே 11-ஆம் தேதி ரிலீஸ் செய்யத் திட்டமிட்டுள்ளனர்.

    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்