முகப்புகோலிவுட்

'இரும்புத்திரை பார்ட் 2 கண்டிப்பாக தயாராகும்' - விஷால் உறுதி

  | June 14, 2018 12:47 IST
Vishal

துனுக்குகள்

  • விஷால் நடிப்பில் உருவான படம் `இரும்புத்திரை'
  • இப்படம் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றது
  • இதன் இரண்டாம் பாகமும் உருவாகும் என தெரிவித்திருக்கிறார் விஷால்
விஷால் நடிப்பில் மே மாதம் வெளியான சைபர் கிரைம் த்ரில்லரான 'இரும்புத்திரை' திரைப்படம், வணிக ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றது.

தொழில்நுட்ப முன்னேற்றங்களைக் கொண்டு சாமானிய மக்கள் எவ்வாறெல்லாம் ஏமாற்றப்படுகிறார்கள் என்பதை மிகத்தெளிவாக பார்வையாளர்களுக்கு சொன்னதாலும், ஆதார் கார்டு தகவல் கசிவு உள்ளிட்ட பல சர்ச்சைக்குரிய விஷயங்களை பேசியதாலும் இயக்குநர் மித்ரன் வெகுவாக பாராட்டப்பட்டார்.

ஜூன் 1 அன்று 'அபிமன்யுடு' என்கிற பெயரில் தெலுங்கிலும் வெளியாகி வெற்றி பெற்றுள்ளது இத்திரைப்படம். இந்நிலையில் தெலுங்கு சக்ஸஸ் மீட்டில் பேசிய நடிகர் விஷால், 'இதே டீமோடு மீண்டும் இணைந்து இப்படத்தின் இரண்டாம் பாகத்தை தயாரித்து நடிப்பேன். எல்லாம் சரியாக அமையும் பட்சத்தில், இரும்புத்திரை / அபிமன்யுடு படத்தின் பார்ட் 2 விரைவில் தயாராகும்' என்றார்.
    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்