முகப்புகோலிவுட்

சிவகார்த்திகேயன் படத்திற்கு ‘ஆஸ்கர் நாயகன்’ இசையா?

  | January 11, 2018 12:22 IST
Sivakarthikeyan Next Film

துனுக்குகள்

  • சிவகார்த்திகேயன் கைவசம் 3 படங்கள் உள்ளது
  • இந்த படம் சைன்ஸ்-ஃபிக்ஷன் ஜானரில் உருவாகவுள்ளது
  • இதன் ப்ரீ-புரொடக்ஷன் பணிகள் நடந்து வருகிறதாம்
‘ரெமோ’ படத்தின் வெற்றிக்கு பிறகு சிவகார்த்திகேயன் நடித்து சமீபத்தில் வெளியான படம் ‘வேலைக்காரன்’. மோகன் ராஜா இயக்கியிருந்த இப்படம் ரசிகர்களிடையேவும், விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றது. இதனையடுத்து சிவகார்த்திகேயன் கைவசம் பொன்ராம் படம், ‘இன்று நேற்று நாளை’ ரவிகுமார் மற்றும் விக்னேஷ் சிவன் இயக்கவிருக்கும் புதிய படங்கள் உள்ளது.

இதில் பொன்ராம் இயக்கும் படத்தின் டைட்டில் ‘சீமராஜா’ என்று கூறப்படுகிறது. இப்படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக சமந்தா டூயட் பாடி ஆடி வருகிறார். இதன் ஷூட்டிங் பரபரப்பாக நடைபெறுகிறது. ரவிகுமார் இயக்கவுள்ள படத்தின் ப்ரீ-புரொடக்ஷன் பணிகள் நடந்து வருகிறதாம்.

இந்த படம் சைன்ஸ்-ஃபிக்ஷன் ஜானரில் உருவாகவுள்ளது. தற்போது, இதற்கு இசையமைக்க ‘இசை புயல்’ ஏ.ஆர்.ரஹ்மானிடம் பேச்சு வார்த்தை நடப்பதாக தகவல் கசிந்துள்ளது. வெகு விரைவில் படத்தின் டைட்டில், நடிக்கவுள்ள இதர நடிகர்கள் – பணியாற்றவிருக்கும் தொழில்நுட்ப கலைஞர்களின் பட்டியல் மற்றும் ஷூட்டிங் ப்ளான் குறித்த அப்டேட்ஸ் டிவிட்டப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
 

    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்