முகப்புகோலிவுட்

‘மாரி 2’ படப்பிடிப்பில் தனுஷுக்கு படுகாயமா?

  | June 23, 2018 16:38 IST
Dhanush Maari 2

துனுக்குகள்

  • இதன் முதல் பாகம் சூப்பர் ஹிட்டானது
  • மலையாள நடிகர் டோவினோ தாமஸுக்கு வில்லன் கதாபாத்திரமாம்
  • தனுஷுடன், டோவினோ மோதுவதுபோல் ஒரு சண்டைக்காட்சி படமாக்கப்பட்டது
2015-ஆம் ஆண்டு தனுஷ் நடிப்பில் வெளியான படம் ‘மாரி’. பாலாஜி மோகன் இயக்கியிருந்த இப்படம் மாஸ் ஹிட்டானது. இதில் தனுஷுக்கு ஜோடியாக காஜல் அகர்வால் நடித்திருந்தார். தற்போது, மீண்டும் தனுஷ் – பாலாஜி மோகன் கூட்டணி ‘மாரி 2’-விற்காக கைகோர்த்துள்ளது. இப்படத்தில் தனுஷுக்கு ஜோடியாக ‘ப்ரேமம்’ புகழ் சாய் பல்லவி டூயட் பாடி ஆடி வருகிறார்.

கிருஷ்ணா, வரலக்ஷ்மி சரத்குமார், ரோபோ ஷங்கர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். மலையாள நடிகர் டோவினோ தாமஸுக்கு வில்லன் கதாபாத்திரமாம். யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்து வரும் இதற்கு ஓம் பிரகாஷ் ஒளிப்பதிவு செய்கிறார், பிரசன்னா படத்தொகுப்பாளராக பணியாற்றுகிறார். இதனை தனுஷ் தனது சொந்த தயாரிப்பு நிறுவனமான ‘வுண்டர்பார் ஃபிலிம்ஸ்’ மூலம் தயாரிக்கிறார்.

ஒரே நேரத்தில் தமிழ், தெலுங்கு என 2 மொழிகளில் இந்த படம் உருவாகி வருகிறது. படத்தின் படப்பிடிப்பு பரபரப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், ஷூட்டிங்கில் தனுஷுடன், டோவினோ மோதுவதுபோல் ஒரு சண்டைக்காட்சி படமாக்கப்பட்டது. அப்போது, எதிர்பாராத விதமாக தனுஷுக்கு வலது காலிலும், இடது கையிலும் காயம் ஏற்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்