முகப்புகோலிவுட்

'பேட்மேன்' தமிழ் ரீமேக்கில் தனுஷ் நடிக்கிறாரா?

  | February 15, 2018 17:07 IST
Pad Man Akshay Kumar

துனுக்குகள்

  • பால்கி இயக்கத்தில் அக்ஷய் குமார் நடித்திருக்கும் படம் `பேட்மேன்'
  • அருணாச்சலம் முருகானந்தம் என்பவரது வாழ்க்கையைத் தழுவி உருவானது படம்
  • இப்படம் தமிழில் ரீமேக் ஆவதாக தகவல் வெளியாகியுள்ளது
மலிவு விலையில் நாப்கின் தயாரிக்கும் கருவியைக் கண்டுபிடித்த அருணாச்சலம் முருகானந்தம் என்பவரது வாழ்க்கையைத் தழுவி உருவான படம் `பேட்மேன்'. இப்படத்தை பால்கி இயக்க, அக்ஷய் குமார், ராதிகா ஆப்தே, சோனம் கபூர் ஆகியோர் நடித்திருந்தனர். இப்படம் கடந்த 9ம் தேதி வெளியானது.

படம் வெளியாகி நல்ல வசூலையும், வரவேற்பையும் பெற்றுவருகிறது. இப்படத்தின் தமிழ் ரீமேக் பற்றிய தகவல்கள் தற்போது வெளியாகி வருகிறது. படத்தை தயாரித்திருந்த கொலம்பியா பிக்சர்ஸ், தமிழ் ரீமேக்கில் தீவிர ஆர்வம் காட்டி வருகிறதாம். தமிழில் அக்ஷயின் ரோலில் தனுஷ் நடிப்பதாகவும் சொல்லப்படுகிறது.

சமீபத்தில் பேட்மேன் சிறப்புத் திரையிடலில் கலந்து கொண்டிருந்த அருணாச்சலம் முருகானந்தம், "இந்த ரோலில் தனுஷ் நடித்தால் பொருத்தமாக இருக்கும். அவர் நடிப்பில், `பேட்மேன்' தமிழ் ரீமேக்கை பார்க்க நான் ஆர்வமாக இருக்கிறேன்" எனக் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது. பேட்மேன் ரீமேக் ஆகுமா, அதில் தனுஷ் நடிப்பாரா? என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
 
    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்