முகப்புகோலிவுட்

‘2.0, காலா’-விற்கு பிறகு ரஜினி ‘முதல்வன் 2’வில் நடிக்கப்போகிறாரா?

  | January 11, 2018 16:47 IST
Mudhalvan 2

துனுக்குகள்

  • ரஜினி கைவசம் இரண்டு படங்கள் உள்ளது
  • சட்டமன்ற தேர்தலின் போது ரஜினி தனிக்கட்சி ஆரம்பிக்கவுள்ளார்
  • அரசியல் கதைக்களம் கொண்ட இப்படம் ‘முதல்வன் 2’ என கூறப்படுகிறது
‘கபாலி’ படத்தின் வெற்றிக்கு பிறகு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கைவசம் ஷங்கரின் ‘2.0’ மற்றும் பா.இரஞ்சித்தின் ‘காலா’ ஆகிய 2 படங்கள் உள்ளது. இதில் ‘2.0’ படத்தின் படப்பிடிப்பு முற்றிலும் நிறைவு பெற்று போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் பரபரப்பாக நடைபெற்று வருகிறது. ‘காலா’ படத்தில் ரஜினிகாந்த் சம்பந்தப்பட்ட அனைத்து காட்சிகளும் படமாக்கப்பட்டு விட்டதாம்.

இதன் இறுதிக்கட்ட ஷூட்டிங் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இவ்விரண்டு படங்களின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்ஸ் மற்றும் ‘2.0’வின் பாடல்கள் வெளியிடப்பட்டு ரசிகர்களிடம் செம லைக்ஸ் குவித்து வைரலானது. அதுமட்டுமின்றி, இப்படங்களின் மீதான எதிர்பார்ப்பையும் எகிற வைத்தது. சமீபத்தில், ரஜினிகாந்த் “நான் அரயசியலுக்கு வருவது உறுதி. அது இந்த காலத்தின் கட்டாயம். வரப்போகிற சட்டமன்ற தேர்தலின் போது நான் தனிக்கட்சி ஆரம்பிப்பேன்” என்று தெரிவித்தார்.

இந்நிலையில், ‘2.0’ படத்திற்கு பிறகு மீண்டும் ரஜினி – ஷங்கர் கூட்டணி அமைக்கவுள்ளதாக தகவல் கசிந்துள்ளது. மேலும், அரசியல் கதைக்களம் கொண்ட இப்படம் ‘முதல்வன் 2’ என கூறப்படுகிறது. ஷங்கர் இயக்கத்தில் வெளியான ‘முதல்வன்’ முதல் பாகத்தில் அர்ஜுன் நடித்திருந்தார். இந்த படம் மெகா ஹிட்டானது. வெகு விரைவில் ‘முதல்வன்’ பார்ட் 2 குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு டிவிட்டப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்