முகப்புகோலிவுட்

சூரியுடன் இணையும் கவுதம் கார்த்திக்

  | January 16, 2019 11:13 IST
Gautham Karthik

துனுக்குகள்

  • நடிகர் கார்த்திக் மகன் இவர்
  • இவரின் அடுத்த படம் "தேவராட்டம்"
  • தற்போது புதிய படம் ஒன்றில் ஒப்பந்தமாகி இருக்கிறார்
இயக்குநர் திரு இயக்கத்தில் கார்த்திக், கௌதம் கார்த்திக், ரெஜினா கஸாண்ட்ரா, இணைந்து நடித்த திரைப்படம் ‘மிஸ்டர் சந்திரமௌலி. இந்த திரைப்படம் தோல்வி அடைந்தது.
 
கவுதம் கார்த்திக் தற்போது நடிக்கும் 'தேவராட்டம்' படம் கை கொடுக்கும் என்று நம்பிக்கொண்டிருக்கிறார். தற்போது இந்தப்படத்தின் வேலைகள் இறுதிகட்டத்தை எட்டியுள்ள நிலையில் கவுதம் கார்த்திக் அடுத்த படத்தில் நடிக்க ஒப்பந்தம் ஆகி இருக்கிறார்.
 
இந்த படத்தை அறிமுக இயக்குநர் அருண் சந்திரன் இயக்குகிறார். 'வருத்தப்படாத வாலிபர் சங்கம்', 'ரஜினி முருகன்' ஆகிய படங்களில் பொன்ராமிடம் உதவி இயக்குனராக பணிபுரிந்தவர் அருண் சந்திரன்.
 
குடும்ப கதையாக உருவாக இருக்கும் இந்தப் படத்தில், ஒரு குடும்பத்தின் செல்லப்பிள்ளையாக நடிக்கிறார்  கவுதம் கார்த்திக். எனவே படத்துக்கு செல்லப்பிள்ளை என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது.
 
இந்த படத்தில் சூரி ஒரு முக்கிய கேரக்டரில் நடிக்க மற்ற கேரக்டர்களுக்கான நடிகர், நடிகைகள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்களின் தேர்வு நடந்து வருகிறது. இந்த படத்தின் படப்பிடிப்பு அடுத்த மாதம் தொடங்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
 

    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்