விளம்பரம்
முகப்புகோலிவுட்

‘காலா’வுக்கு 14 கட்ஸுடன் ‘யு/ஏ’ சான்றிதழா?

  | April 03, 2018 15:50 IST
Kaala Movie

துனுக்குகள்

  • இதன் ஃபர்ஸ்ட் லுக் டீசர் நல்ல வரவேற்பை பெற்றது
  • இது ‘சூப்பர் ஸ்டார்’ ரஜினிகாந்தின் கேரியரில் 164-வது படமாம்
  • இப்படத்திற்கு சென்சார் குழு ‘யு/ஏ’ சான்றிதழ் அளித்ததாக கூறப்படுகிறது
‘கபாலி’ படத்தின் வெற்றிக்கு பிறகு ‘சூப்பர் ஸ்டார்’ ரஜினிகாந்த் கைவசம் ஷங்கரின் ‘2.0’, பா.இரஞ்சித்தின் ‘காலா’ மற்றும் இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் படம் என 3 படங்கள் உள்ளது. இதில் ‘காலா’ ரஜினிகாந்தின் 164-வது படமாம். இதனை சூப்பர் ஸ்டாரின் மருமகனும், நடிகருமான தனுஷ் தனது சொந்த தயாரிப்பு நிறுவனமான ‘வுண்டர்பார் ஃபிலிம்ஸ்’ மூலம் தயாரிக்கிறார்.

முக்கிய வேடங்களில் ஹூமா குரேஷி, இயக்குநர் சமுத்திரக்கனி, ஈஸ்வரி ராவ் மற்றும் பலர் நடித்துள்ளனர். பாலிவுட் நடிகர் நானா படேகருக்கு வில்லன் கதாபாத்திரமாம். சந்தோஷ் நாராயணன் இசையமைத்து வரும் இதற்கு முரளி.ஜி ஒளிப்பதிவு செய்துள்ளார், ஸ்ரீகர் பிரசாத் படத்தொகுப்பாளராக பணியாற்றுகிறார். சமீபத்தில், வெளியிடப்பட்ட போஸ்டர்ஸ், ஸ்டில்ஸ் மற்றும் ஃபர்ஸ்ட் லுக் டீசர் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது.

அதுமட்டுமின்றி, படத்தின் மீதான எதிர்பார்ப்பையும் எகிற வைத்தது. இப்படத்தை வருகிற ஏப்ரல் 27-ஆம் தேதி தமிழ், ஹிந்தி, தெலுங்கு ஆகிய 3 மொழிகளில் ரிலீஸ் செய்யத் திட்டமிட்டுள்ளது ‘லைகா புரொடக்ஷன்ஸ்’ நிறுவனம். இந்நிலையில், படத்தை பார்த்த சென்சார் குழுவினர் 14 கட்ஸ் கொடுத்து ‘யு/ஏ’ சான்றிதழ் அளித்துள்ளதாக கோலிவுட்டில் தண்டோரா போடப்படுகிறது. இது குறித்து நம்பத்தகுந்த வட்டாரங்களில் விசாரித்தபோது “பரவி வரும் இச்செய்தி வதந்தியே. இன்னும் படம் சென்சார் செய்யப்படவில்லை” என்று தெரிவித்துள்ளனர்.
    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்