‘கபாலி’ படத்தின் வெற்றிக்கு பிறகு ‘சூப்பர் ஸ்டார்’ ரஜினிகாந்த் கைவசம் ஷங்கரின் ‘2.0’ மற்றும் பா.இரஞ்சித்தின் ‘காலா’ ஆகிய 2 படங்கள் உள்ளது. இதில் ‘காலா’ ரஜினிகாந்தின் 164-வது படமாம். இதனை சூப்பர் ஸ்டாரின் மருமகனும், நடிகருமான தனுஷ் தனது சொந்த தயாரிப்பு நிறுவனமான ‘வுண்டர்பார் ஃபிலிம்ஸ்’ மூலம் தயாரிக்கிறார். முக்கிய வேடங்களில் ஹூமா குரேஷி, இயக்குநர் சமுத்திரக்கனி, ஈஸ்வரி ராவ், நானா படேகர் மற்றும் பலர் நடித்துள்ளனராம்.
சந்தோஷ் நாராயணன் இசையமைத்து வரும் இதற்கு முரளி.ஜி ஒளிப்பதிவு செய்துள்ளார், ஸ்ரீகர் பிரசாத் படத்தொகுப்பாளராக பணியாற்றுகிறார். ஏற்கெனவே, ‘காலா’ டீமால் டிவிட்டப்பட்ட போஸ்டர்ஸ் மற்றும் ஷூட்டிங் ஸ்பாட் ஸ்டில்ஸ் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது. அதுமட்டுமின்றி, படத்தின் மீதான எக்ஸ்பெக்டேஷன் லெவலையும் அதிகரிக்கச் செய்தது.
இதன் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் பரபரப்பாக நடைபெற்று வருகிறது. முதலில் ‘2.0’ படத்தை ஏப்ரல் 14-ஆம் தேதியும், அதற்கு பிறகு 2 மாதங்கள் கழித்து ‘காலா’வை ரிலீஸ் செய்யத் திட்டமிடப்பட்டிருந்தது. தற்போது, கிராஃபிக்ஸ் பணிகள் காரணமாக ‘2.0’வின் ரிலீஸ் தாமதமாக வாய்ப்பு இருப்பதால், ‘காலா’வை ஏப்ரல் 14-ஆம் தேதி ரிலீஸ் செய்யவுள்ளதாக கோலிவுட்டில் தண்டோரா போடப்படுகிறது. வெகு விரைவில் இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு டிவிட்டப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.