முகப்புகோலிவுட்

சுட்ட கதையா விஸ்வாசம்! குழப்பத்தில் ரசிகர்கள்

  | January 11, 2019 17:59 IST
Viswasam

துனுக்குகள்

  • அஜித் மற்றும் நயன்தாரா நடிப்பில் வெளியாகி இருக்கும் “விஸ்வாசம்”
  • வெங்கடேஷ், நயன்தாரா நடிப்பில் வெளியான படம் துளசி
  • இப்படம் நேற்று வெளியாகி வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது
இயக்குனர் சிவா மற்றும் அஜித் நான்காவது முறையாக இணைந்திருக்கும் படம் விஸ்வாசம். நேற்று தமிழ்நாடு முழுவதும் வெளியான இப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.
 
திரையரங்குகள் நிரம்ப ஓடிக்கொண்டிருக்கும் இப்படத்திற்கு ரசிகர்கள் நல்ல ஆதரவு கொடுத்து வருகிறார்கள். இந்நிலையில் விஸ்வாசம் கதை குறித்து ஒரு கதை சொல்லப்படுகிறது.
 
2007-ம் ஆண்டு தெலுங்கில் வெங்கடேஷ், நயன்தாரா நடிப்பில் வெளியான படம்  துளசி.  கனவரின் முரட்டு  குணத்தால்  அவரை பிரிந்து மகனுடன் தனியாக வாழ்கிறாள் மனைவி. மனைவியின் கோபத்தால் தன் சொந்த மகனிடமே தான் யார் என்ற உண்மையை மறைத்து பழகுகிறார் அப்பா. பின்னர் மகனுக்கு ஒரு பிரச்சனை ஏற்பட அதை தந்தை எப்படி எதிர்கொள்கிறார் மீண்டும் அந்த குடும்பம் எப்படி இணைகிறது என்பது தான் இந்த படத்தின் மையக்கரு..
 
தற்போது அஜித் மற்றும் நயன்தாரா நடிப்பில் வெளியாகி இருக்கும் “விஸ்வாசம்” படத்தின் கதையும் இதுதான். ஆனால் முன்னும் பின்னும் பல்வேறு மாற்றங்கள் இருப்பதை பார்க்க முடிகிறது.
 
ஒற்றை கருத்துடையவர்கள் ஒரே மாதிரி சிந்திப்பது ஆச்சர்யப்படுவதற்கில்லை. ஆனால் விஸ்வாசம் படத்தின் கரு அங்கிருந்து எடுக்கபட்டதா என்று குழப்பத்தில் இருக்கிறார்கள் ரசிகர்கள். ஆனால் இது குறித்து இருதரப்பு படக்குழுவினரும் எந்த அதிகாரபூர்வ அறிவிப்பும் கொடுக்க வில்லை என்பது குறிப்பிட தக்கது. இதற்கு பிறகு ஏதாவது பிரச்சனை ஏற்படுமா என்பதை பொருத்திருந்துதான் பார்க்க வேண்டும்.


மேலும் படிக்க -"ரஜினி, விஜய் இருவரையும் பின்னுக்கு தள்ளிய அஜித்"

    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்