முகப்புகோலிவுட்

‘ரஜினி 166’ படத்தின் ஜானர் இதுவா?

  | December 06, 2018 13:54 IST
Ar Murugadoss

துனுக்குகள்

  • ரஜினி கைவசம் ‘பேட்ட’ மற்றும் ஏ.ஆர்.முருகதாஸ் படம் என 2 படங்கள் உள்ளது
  • ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கவுள்ள படத்தை ‘லைகா’ நிறுவனம் தயாரிக்கவுள்ளது
  • ஷூட்டிங்கை அடுத்த ஆண்டு (2019) மார்ச் மாதம் துவங்கத் திட்டமிட்டுள்ளனர்
பா.இரஞ்சித்தின் ‘காலா' படத்திற்கு பிறகு ‘சூப்பர் ஸ்டார்' ரஜினிகாந்த் நடித்த ‘2.0' சமீபத்தில் ரிலீஸானது. ஷங்கர் இயக்கியிருந்த இப்படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இதனையடுத்து ரஜினி கைவசம் கார்த்திக் சுப்புராஜின் ‘பேட்ட' மற்றும் இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் படம் என 2 படங்கள் உள்ளது.

இதில் ‘பேட்ட' படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் பரபரப்பாக நடைபெற்று வருகிறது. இந்த படம் பொங்கலுக்கு ரிலீஸாகுமாம். ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் ரஜினி நடிக்கவுள்ள படம், அவரின் கேரியரில் 166-வது படமாம். இன்னும் பெயரிடப்படாத இப்படத்தை ‘லைகா புரொடக்ஷன்ஸ்' நிறுவனம் தயாரிக்கவுள்ளது.

இதற்கு சந்தோஷ் சிவன் ஒளிப்பதிவு செய்யவுள்ளார். இதன் ப்ரீ-புரொடக்ஷன் பணிகள் நடந்து வருகிறது. ஷூட்டிங்கை அடுத்த ஆண்டு (2019) மார்ச் மாதம் துவங்கத் திட்டமிட்டுள்ளனர். தற்போது, இந்த படம் ஃபேண்டசி ஜானரில் உருவாகவிருப்பதாக தகவல் கசிந்துள்ளது.
    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்