முகப்புகோலிவுட்

சிவகார்த்திகேயன் சைன்ஸ்-ஃபிக்ஷன் படப்பிடிப்பில் கலந்து கொண்ட இஷா கோபிகர்

  | July 13, 2018 13:36 IST
Sivakarthikeyan Ar Rahman Film

துனுக்குகள்

  • இதில் சிவாவுக்கு ஜோடியாக ரகுல் ப்ரீத் சிங் நடிக்கிறார்
  • இந்த படம் சைன்ஸ்-ஃபிக்ஷன் ஜானரில் உருவாகுகிறது
  • இதன் ஷூட்டிங் பரபரப்பாக நடைபெற்று வருகிறது
மோகன் ராஜாவின் ‘வேலைக்காரன்’ படத்தின் வெற்றிக்கு பிறகு நடிகர் சிவகார்த்திகேயன் கைவசம் பொன்ராமின் ‘சீமராஜா’, ‘இன்று நேற்று நாளை’ ரவிகுமார் மற்றும் ‘SMS’ எம்.ராஜேஷ் இயக்கும் புதிய படங்கள் உள்ளது. இதில் ரவிகுமார் இயக்கும் படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக ரகுல் ப்ரீத் சிங் டூயட் பாடி ஆடி வருகிறார்.

சைன்ஸ்-ஃபிக்ஷன் ஜானரில் உருவாகும் இந்த படத்தை ’24AM ஸ்டுடியோஸ்’ நிறுவனம் சார்பில் ஆர்.டி.ராஜா மிக பிரம்மாண்டமாக தயாரிக்கிறார். மேலும், முக்கிய வேடங்களில் கருணாகரன், யோகி பாபு, பானுப்ரியா, இஷா கோபிகர் ஆகியோர் நடிக்கின்றனர். ‘இசை புயல்’ ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கும் இதற்கு நிரவ்ஷா ஒளிப்பதிவு செய்கிறார், டி.முத்துராஜ் கலை இயக்குநராக பணியாற்றுகிறார்.
 
 
சமீபத்தில், துவங்கிய இதன் ஷூட்டிங் பரபரப்பாக நடைபெற்று வருகிறது. தற்போது, இப்படத்தின் ஷூட்டிங்கில் நடிகை இஷா கோபிகரும் கலந்து கொண்டதாக தகவல் வெளியாகியுள்ளது. இதை ‘24AM’ நிறுவனமே தங்களது ட்வீட்டர் பக்கத்தில் ஸ்டேட்டஸாகத் தட்டி உறுதிபடுத்தியுள்ளது.

    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்