முகப்புகோலிவுட்

அதிரப்பள்ளி அருவியில் நடக்கும் 'நீயா 2' பட ஷூட்

  | March 12, 2018 13:19 IST
Neeya 2 Movie

துனுக்குகள்

  • ‘நீயா’ பட ஸ்டைலில் பழிவாங்கும் பாம்புகள் பற்றிய கதையாம்
  • இதில் கேத்ரின் திரசா, ராய் லக்ஷ்மி, வரலக்ஷ்மி என ட்ரிபிள் ஹீரோயின்ஸாம்
  • ஜெய் ஐடி நிறுவனத்தில் பணிபுரியும் ஊழியராக வலம் வரவுள்ளார்
விமலின் ‘எத்தன்’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குநராக அறிமுகமானவர் சுரேஷ். இதனையடுத்து ‘நீயா 2’ என்ற படத்தை சுரேஷ் இயக்கி வருகிறார். இதில் ஹீரோவாக ஜெய் நடிக்கிறார். ஜெய்-க்கு ஜோடியாக கேத்ரின் திரசா, ராய் லக்ஷ்மி, வரலக்ஷ்மி சரத்குமார் என ட்ரிபிள் ஹீரோயின்ஸாம்.

இப்படம் கமல்ஹாசனின் ‘நீயா’ பட ஸ்டைலில் பழிவாங்கும் பாம்புகள் பற்றிய கதை என்பதால் தான், ‘நீயா 2’ என டைட்டில் சூட்டப்பட்டுள்ளதாம். ஜெய் ஐடி நிறுவனத்தில் பணிபுரியும் ஊழியராக வலம் வரவுள்ளார். சமீபத்தில், வெளியிடப்பட்ட படத்தின் டைட்டில் லுக் போஸ்டர் ரசிகர்களிடம் செம லைக்ஸ் குவித்து வைரலானது.
 
 
தற்போது, படத்தின் ஷூட்டிங் கேரளாவில் உள்ள அதிரப்பள்ளி அருவியில் நடைபெற்று வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. இதை ராய் லக்ஷ்மியே தனது ட்வீட்டர் பக்கத்தில் ஸ்டேட்டஸாகத் தட்டியதோடு, ஷூட்டிங் ஸ்பாட்டில் எடுத்த புகைப்படத்தையும் ஷேரிட்டு உறுதிபடுத்தியுள்ளார். வெகு விரைவில் டிரெய்லர் மற்றும் ஆடியோ ரிலீஸ் ப்ளான் குறித்த அப்டேட்ஸ் ட்வீட்டப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்