முகப்புகோலிவுட்

யுவன் ஷங்கர் ராஜா வெளியிட்ட ‘ஜருகண்டி’ பட டிரெய்லர்

  | July 06, 2018 18:09 IST
Jarugandi Movie

துனுக்குகள்

  • ஜெய்-க்கு ஜோடியாக ரெபா மோனிகா ஜான் டூயட் பாடி ஆடியுள்ளார்
  • இப்படத்தின் டீசர் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது
  • இதனை நடிகர் நிதின் சத்யா தனது சொந்த தயாரிப்பு நிறுவனம் மூலம் தயாரிக்கிறார
சுந்தர்.சி-யின் ‘கலகலப்பு 2’ படத்திற்கு பிறகு ஜெய் கைவசம் வெங்கட் பிரபுவின் ‘பார்ட்டி’, பிச்சுமணியின் ‘ஜருகண்டி’, சுரேஷின் ‘நீயா 2’, சியாம் – பிரவீன் இணைந்து இயக்கும் ‘மாங்கல்யம் தந்துனானேனா’ என அடுத்தடுத்து படங்கள் வண்டி கட்டி நிற்கிறது. இதில் ‘ஜருகண்டி’ படத்தை ‘ஷர்தா எண்டர்டெயின்மெண்ட்’ நிறுவனத்துடன் இணைந்து நடிகர் நிதின் சத்யா தனது சொந்த தயாரிப்பு நிறுவனமான ‘ஷ்வேத்’ மூலம் தயாரித்து வருகிறார்.

இப்படத்தில் ஜெய்-க்கு ஜோடியாக ‘ஜேக்கப்பிண்டே ஸ்வர்க்க ராஜ்யம்’ எனும் மலையாள பட புகழ் ரெபா மோனிகா ஜான் டூயட் பாடி ஆடியுள்ளார். மேலும், முக்கிய வேடங்களில் ரோபோ ஷங்கர், டேனியல், இளவரசு, மைம் கோபி ஆகியோர் நடித்துள்ளனர். போபோ ஷஷி இசையமைத்து வரும் இதற்கு அரவிந்த் குமார் - ஆர்.டி.ராஜசேகர் ஒளிப்பதிவு செய்துள்ளனர், பிரவீன்.கே.எல் படத்தொகுப்பாளராக பணியாற்றுகிறார்.
 

சமீபத்தில், வெளியிடப்பட்ட படத்தின் மோஷன் போஸ்டர் மற்றும் ஃபர்ஸ்ட் லுக் டீசர் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது. இதன் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் முடிவடையும் தருவாயில் உள்ளதாம். தற்போது, படத்தின் டிரெய்லரை இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா தனது ட்வீட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இந்த டிரெய்லர் ரசிகர்களிடையே செம லைக்ஸ் குவித்து வருகிறது. அதுமட்டுமின்றி, படத்தின் மீதான எதிர்பார்ப்பையும் அதிகரிக்கச் செய்துள்ளது.

    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்