சக்தி சவுந்தர் ராஜனின் ‘டிக் டிக் டிக்’ படத்திற்கு பிறகு ஜெயம் ரவி கைவசம் கார்த்திக் தங்கவேலின் ‘அடங்க மறு’, மோகன் ராஜாவின் ‘தனி ஒருவன் 2’ மற்றும் இயக்குநர் அஹமத் படம் என மூன்று படங்கள் உள்ளது. தற்போது, ஜெயம் ரவி கால்ஷீட் டைரியில் மற்றுமொரு புதிய படம் இணைந்துள்ளது.
இந்த படத்தை அறிமுக இயக்குநர் பிரதீப் ரங்கநாதன் இயக்கவுள்ளார். இது ஜெயம் ரவியின் கேரியரில் 24-வது படமாம். இன்னும் பெயரிடப்படாத இப்படத்தை ‘வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனல்’ நிறுவனம் தயாரிக்கவுள்ளது.
இதை ஜெயம் ரவியே தனது ட்விட்டர் பக்கத்தில் ஸ்டேட்டஸாகத் தட்டி உறுதிபடுத்தியுள்ளார். வெகு விரைவில் இதில் நடிக்கவுள்ள இதர நடிகர்கள் – பணியாற்றவிருக்கும் தொழில்நுட்ப கலைஞர்களின் பட்டியல் மற்றும் ஷூட்டிங் ப்ளான் குறித்த அப்டேட்ஸ் வெளியாகுமென எதிர்பார்க்கப்படுகிறது.