முகப்புகோலிவுட்

தொடங்கியது 'ஜெயம் ரவி 24' படப்பிடிப்பு

  | September 20, 2018 17:10 IST
Jayam Ravi 24

துனுக்குகள்

  • ஜெயம் ரவி கைவசம் நான்கு படங்கள் உள்ளது
  • இது ஜெயம் ரவியின் கேரியரில் 24-வது படமாம்
  • ஜெயம் ரவிக்கு ஜோடியாக காஜல் அகர்வால் டூயட் பாடி ஆடவுள்ளார்
சக்தி சவுந்தர் ராஜனின் ‘டிக் டிக் டிக்’ படத்திற்கு பிறகு ஜெயம் ரவி கைவசம் கார்த்திக் தங்கவேலின் ‘அடங்க மறு’, மோகன் ராஜாவின் ‘தனி ஒருவன் 2’, இயக்குநர் அஹமத் படம் மற்றும் அறிமுக இயக்குநர் பிரதீப் ரங்கநாதன் படம் என நான்கு படங்கள் உள்ளது.

இதில் பிரதீப் ரங்கநாதன் படம் ஜெயம் ரவியின் கேரியரில் 24-வது படமாம். இன்னும் பெயரிடப்படாத இப்படத்தை ‘வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனல்’ நிறுவனம் தயாரிக்கவுள்ளது. ஜெயம் ரவிக்கு ஜோடியாக காஜல் அகர்வால் டூயட் பாடி ஆடவுள்ளார். மேலும், முக்கிய வேடங்களில் இயக்குநர் கே.எஸ்.ரவிகுமார், சம்யுக்தா ஹெக்டே, யோகி பாபு ஆகியோர் நடிக்கவுள்ளனர்.

ரிச்சர்ட்.எம்.நாதன் ஒளிப்பதிவு செய்யவுள்ள இதற்கு பிரதீப்.ஈ.ராகவ் படத்தொகுப்பாளராக பணியாற்றவுள்ளார். தற்போது, இன்று (செப்டம்பர் 20-ஆம் தேதி) முதல் படத்தின் ஷூட்டிங் பூஜையுடன் துவங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்