முகப்புகோலிவுட்

ஜெயம் ரவியின் ‘அடங்க மறு’ பட ஸ்டேட்டஸ்

  | January 11, 2018 13:51 IST
Jayam Ravi 24

துனுக்குகள்

  • இதில் ஜெயம் ரவிக்கு ஜோடியாக ராஷி கண்ணா டூயட் பாடி ஆடி வருகிறார்
  • இதன் ஷூட்டிங் சென்னை அண்ணா நகரில் பரபரப்பாக நடைபெற்று வருகிறது
  • இது ஜெயம் ரவியின் கேரியரில் 24-வது படமாம்
ஏ.எல்.விஜய்யின் ‘வனமகன்’ படத்தின் வெற்றிக்கு பிறகு ஜெயம் ரவி கைவசம் சக்தி சவுந்தர் ராஜனின் ‘டிக் டிக் டிக்’, சுந்தர்.சியின் ‘சங்கமித்ரா’, அறிமுக இயக்குநர் கார்த்திக் தங்கவேலின் ‘அடங்க மறு’ மற்றும் ‘என்றென்றும் புன்னகை’ புகழ் இயக்குநர் அஹமத் இயக்கவுள்ள புதிய படம் என அடுத்தடுத்து படங்கள் வண்டிகட்டி நிற்கிறது.

இதில் ‘அடங்க மறு’ படத்தை ‘ஹோம் மூவி மேக்கர்ஸ்’ நிறுவனம் தயாரித்து வருகிறது. இது ஜெயம் ரவியின் கேரியரில் 24-வது படமாம். ஜெயம் ரவிக்கு ஜோடியாக ராஷி கண்ணா டூயட் பாடி ஆடி வருகிறார். இப்படத்தில் ஜெயம் ரவி போலீஸாக வலம் வரவுள்ளார். சாம்.சி.எஸ் இசையமைக்கும் இதற்கு சத்யன் சூர்யன் ஒளிப்பதிவு செய்கிறார், ரூபன் படத்தொகுப்பாளராக பணியாற்றுகிறார்.

சமீபத்தில், இதன் ஷூட்டிங் துவங்கியது. தற்போது, சென்னை அண்ணா நகரில் படப்பிடிப்பு நடைபெற்று வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. இரவில் மட்டுமே நடைபெறும் இந்த ஷெடியூலில் சண்டைக் காட்சி மற்றும் சேஸிங் காட்சியை படமாக்கி வருகின்றனர். வெகு விரைவில் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் ரிலீஸ் ப்ளான் குறித்த அப்டேட் டிவிட்டப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
 

    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்