விளம்பரம்
முகப்புகோலிவுட்

ஜெயம் ரவியின் ‘டிக் டிக் டிக்’ செகண்ட் லுக்

  | August 10, 2017 00:21 IST
Tik Tik Tik Second Look Poster

துனுக்குகள்

  • இந்திய சினிமாவிற்கே அதிகம் பரிச்சயம் இல்லாத கதைக்களம்
  • இதன் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் செம லைக்ஸ் குவித்து வருகிறது
  • இப்படத்தின் சேட்டிலைட் ரைட்ஸை ‘சன் டிவி’ கைப்பற்றியுள்ளது
ஏ.எல்.விஜய்யின் ‘வனமகன்’ படத்தின் வெற்றிக்கு பிறகு ஜெயம் ரவி கைவசம் சக்தி சவுந்தர் ராஜனின் ‘டிக் டிக்டிக்’,சுந்தர்.சி.யின் ‘சங்கமித்ரா’ மற்றும் அஹமத் படம் ஆகிய மூன்று படங்கள் உள்ளது. இதில் ‘டிக் டிக் டிக்’ படத்தின் கதைக்களம் கோலிவுட் மட்டுமின்றி இந்திய சினிமாவிற்கே அதிகம் பரிச்சயம் இல்லாத விண்வெளி சம்பந்தப்பட்டதாம். ஆகையால், இந்த படத்தின் அறிவிப்பு வந்த நாளிலிருந்தே ரசிகர்களின் எக்ஸ்பெக்டேஷன் லெவல் உச்சத்தில் உள்ளது.

ஜெயம் ரவிக்கு ஜோடியாக நிவேதா பெத்துராஜ் நடித்து வருகிறார். நம்மை மிரட்டும் வில்லன் வேடத்தில் ஆரோன் அஜீஸ் நடிக்கிறார். மேலும், ஜெயம் ரவியின் மகன் ஆரவ்வும் நடிக்கிறாராம். டி.இமான் இசையமைத்து வரும் இதற்கு எஸ்.வெங்கடேஷ் ஒளிப்பதிவு செய்து வருகிறார், பிரதீப்.E.ராகவ் படத்தொகுப்பாளராக பணியாற்றுகிறார். ‘ஜபக்’ஸ் மூவீஸ்’ நிறுவனம் சார்பில் வி.ஹித்தேஷ் ஜபக் மிக பிரம்மாண்டமாக தயாரித்து வருகிறார். படத்தின் ஷூட்டிங் முடிவடையும் தருவாயில் உள்ளதாம்.
 
ஏற்கெனவே, படத்தின் சேட்டிலைட் ரைட்ஸை ‘சன் டிவி’ கைப்பற்றியது குறிப்பிடத்தக்கது. சமீபத்தில், படக்குழுவால் டிவிட்டப்பட்ட ஜெயம் ரவியின் ஸ்டில் மற்றும் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது. தற்போது, படத்தின் செகண்ட் லுக் போஸ்டரை ஜெயம் ரவி தனது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இப்போஸ்டர் ரசிகர்களிடையே செம லைக்ஸ் குவித்து வைரலாகி வருகிறது. அதுமட்டுமின்றி, படத்தின் மீதான எதிர்பார்ப்பையும் அதிகரிக்கச் செய்துள்ளது. படத்தின் ஃபர்ஸ்ட் லுக் டீஸரை வருகிற ஆகஸ்ட் 14-ஆம் தேதி ரிலீஸ் செய்யவுள்ளனர்.

    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்