முகப்புகோலிவுட்

உதயநிதி ஸ்டாலின் படத்தில் ஜெயராம்

  | April 10, 2018 12:02 IST
Udhayanidhi Stalin Next Film

துனுக்குகள்

  • இப்படத்தில் உதயநிதி ஸ்டாலினுக்கு ஜோடியாக 3 ஹீரோயின்ஸாம்
  • அட்லியிடம் உதவி இயக்குநராக பணியாற்றி சினிமா கற்ற ஈனோக் இயக்கவுள்ளார்
  • TFPC அறிவித்த ஸ்ட்ரைக் முடிந்த பிறகு இப்படத்தின் ஷூட்டிங் துவங்கப்படுமாம்
ப்ரியதர்ஷனின் ‘நிமிர்’ படத்திற்கு பிறகு உதயநிதி ஸ்டாலின் கைவசம் சீனு ராமசாமியின் ‘கண்ணே கலைமானே’, ‘இரும்புத்திரை’ மித்ரன் இயக்கவிருக்கும் புதிய படம் மற்றும் ஈனோக் படம் என அடுத்தடுத்து படங்கள் வண்டி கட்டி நிற்கிறது.

இதில் அறிமுக இயக்குநர் ஈனோக் என்பவர் இயக்கவுள்ள படத்தின் ப்ரீ-புரொடக்ஷன் பணிகள் பரபரப்பாக நடைபெற்று வருகிறதாம். இயக்குநர் ஈனோக், ‘தெறி, மெர்சல்’ புகழ் இயக்குநர் அட்லியிடம் உதவி இயக்குநராக பணியாற்றி சினிமா கற்றவராம். இன்னும் பெயரிடப்படாத இந்த படத்தின் ஷூட்டிங்கை தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் அறிவித்த ஸ்ட்ரைக் முடிந்த பிறகு துவங்கத் திட்டமிட்டுள்ளனர்.

இப்படத்தில் உதயநிதி ஸ்டாலினுக்கு ஜோடியாக 3 ஹீரோயின்ஸாம். ‘மேயாத மான்’ புகழ் ப்ரியா பவானி ஷங்கர், இந்துஜா இருவரும் நடிக்கவுள்ளனர். இன்னொரு கதாநாயகியின் பெயர் விரைவில் அறிவிக்கப்படுமாம். உதயநிதிக்கு அப்பாவாக ‘நவரச நாயகன்’ கார்த்திக் நடிக்கவிருக்கிறார். தற்போது, முக்கிய வேடத்தில் நடிக்க ஜெயராம் கமிட்டாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்