முகப்புகோலிவுட்

"நானே 'காலா'வாக உணர்ந்தேன்" - இரஞ்சித்தை பாராட்டிய ஜிக்னேஷ் மேவானி

  | June 13, 2018 10:33 IST
Kaala

துனுக்குகள்

  • ரஜினி - இரஞ்சித் கூட்டணியில் உருவான படம் காலா.
  • சென்றவாரம் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றிருக்கிறது
  • இப்படம் பற்றி விக்னேஷ் மேவானி ட்வீட் செய்துள்ளார்.
'கபாலி'க்குப் பிறகு ரஜினி - இரஞ்சித் கூட்டணியில் உருவான படம் 'காலா'. இப்படம் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றுவருகிறது. நானா படேகர், ஈஸ்வரி ராவ், ஹூமா குரேஷி, மணிகண்டன், சமுத்திரக்கனி எனப் பலரும் இப்படத்தில் நடித்துள்ளனர்.

குஜராத் சுயேட்சை சட்டமன்ற உறுப்பினரும், இளம் தலித் தலைவருமான ஜிக்னேஷ் மேவானி இப்படத்தைப் பாராட்டி ட்வீட் செய்துள்ளார். "நேற்றுதான் இரஞ்சித்தின் காலா படம் பார்த்தேன். நானே 'காலா'வாக உணர்ந்தேன். மிக சிறப்பான படம் இரஞ்சித் இன்னும் இதுபோன்ற சிறப்பான படங்களை தந்து திரைப்பயணம் மேற்கொள்ளுவார் என நம்புகிறேன்" எனக் குறிப்பிட்டிருந்தார். 

இதை ரீட்விட் செய்து நன்றி தெரிவித்திருந்தார் இரஞ்சித். நாடு முழுவதும் சலனத்தை ஏற்படுத்தியிருக்கும் 'காலா'வுக்கு பலரது பாராட்டுகளும் குவிகிறது. 
    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்