முகப்புகோலிவுட்

ஜீவாவின் வித்தியாசமான கெட்டப்பில் `ஜிப்ஸி' ஃபர்ஸ்ட்லுக்!

  | June 11, 2018 12:58 IST
Gypsy

துனுக்குகள்

  • `குக்கூ', `ஜோக்கர்' படங்களை இயக்கியவர் ராஜுமுருகன்
  • இவர் அடுத்ததாக `ஜிப்ஸி' படத்தை இயக்குகிறார்
  • ஜீவா, நடாஷா சிங் ஆகியோர் இப்படத்தில் நடிக்கிறார்கள்
`குக்கூ', `ஜோக்கர்' ஆகிய படங்களை இயக்கியவர் ராஜூமுருகன். இவர் இயக்கிய ஜோக்கர் படம் தேசிய விருது வென்றது குறிப்பிடத்தக்கது. இவர் அடுத்ததாக `ஜிப்ஸி' படம் இயக்குகிறார். ஹீரோவாக ஜீவா நடிக்கும் இதில், அவருக்கு ஜோடியாக மிஸ் இந்தியா இறுதிப் போட்டியாளரும், மிஸ் இமாசல்பிரதேஷ் பட்டம் வென்றவருமான நடாஷா சிங் நடிக்கிறார்.

இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் இன்று வெளியிடப்பட்டுள்ளது. சந்தோஷ் நாராயணன் இசையமைக்கும் இப்படத்திற்கு `அருவி' படத்தின் எடிட்டர் ரேமண்ட் டெரிக் படத்தொகுப்பு செய்கிறார். செல்வக்குமார் இப்படத்திற்கு ஒளிப்பதிவு செய்கிறார். `ஜிப்ஸி' படத்தின் படப்பிடிப்பு காரைக்காலில் இன்று துவங்கியிருக்கிறது. இரண்டாம் கட்டப்படப்பிடிப்பு இமாச்சல் பிரதேசத்தில் நடக்கவிருப்பதாகக் கூறியிருக்கிறார் படத்தின் தயாரிப்பாளர் அம்பேத்குமார்.

நாடுமுழுவதும் பயணப்படும் இசைக் கலைஞனின் காதல் கதையாக இப்படம் இருக்கும் என்ற எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கிறது படத்தின் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர்கள். இப்படம் தவிர்த்து ரிலீஸுக்கு ரெடியாக உள்ள 'கீ' , படப்பிடிப்பை முடித்திருக்கும் `கொரில்லா' ஆகிய படங்கள் ஜீவா கைவசம் உள்ளது.
    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்