முகப்புகோலிவுட்

“கன்ஃபார்மா இவன் மாவோயிஸ்ட்டுதான்” - ஜிப்ஸி டீசர்

  | January 08, 2019 08:39 IST
Gypsy

துனுக்குகள்

  • இவர் எடுத்த ஜோக்கர் படம் நல்ல வரவேற்பைப் பெற்றது
  • இவர் இயக்கும் நான்காவது படம் இது
  • பாலாவின் வர்மா படத்திற்கு வசனம் எழுதியிருக்கிறார் ராஜுமுருகன்
ஒரு பத்திரிகையாளராக, எழுத்தாளராக தன் வாழ்க்கையை தொடங்கி  தற்போது இயக்குனராக பரிணமித்து இருக்கிறார் இயக்குனர் ராஜு முருகன்.
 
தான் ஏற்றுக் கொண்டுள்ள கொள்கைகளை மக்களிடையே கொண்டு செல்ல அவர் எடுத்துள்ள ஆயுதம் எழுத்து. ஆம் தன்னுடைய திரையுலக படைப்புகள் அனைத்தும் வாசிப்பிலிருந்தும்,எழுத்திலிருந்துமே தேர்ந்தெடுக்கிறார் இயக்குனர் ராஜுமுருகன்.
 
குக்கூ, தோழா, ஜோக்கர் போன்ற அபூர்வ படைப்புகளுக்கு சொந்தக்காரர் இவர். கம்யூனிச சித்தாந்தத்தை படித்ததோடு இல்லாமல் அதை தனது படைப்புகள் மூலம் மக்களுக்கு தெரிவித்துக்கொண்டே இருக்கிறார்.
 
இவர் எழுதிய “ஜிப்ஸி” நாவலின் தலைப்பைத்தான் இந்த படத்திற்கு வைத்திருக்கிறார். அந்த நாவலை தழுவிய கதையாக இந்த படம் இருக்கலாம். இந்த படத்திற்கு யுகபாரதியின் வரிகளுக்கு, சந்தோஷ் நாராயணன் இசை அமைத்திருக்கிறார். இந்த படத்தை ஒலிம்பியா மூவிஸ் தயாரிக்கிறது.
 

 
“காற்றோடு திரியும் ஒரு நாடோடியின் வாழ்க்கையில் நாம் பார்த்திராத பல அனுபவங்களை  இதனூடே பகிர்ந்திருக்கிறார் என்றுதான் சொல்ல வேண்டும். அதற்கான சான்றுகளை இந்த படத்தின் டீசர் உறுதிப் படுத்துகிறது.
 
“காஷ்மீர் முதல் கன்னியாகுமாரி வரை எவ்வளவு தூரம் இருக்கும் என்று அக்யூரிட்டாக சொல்ல முடியும், ஆனால் ஒரு இதயத்துக்கும் இன்னொரு இதயத்துக்கும் உள்ள தூரத்தை கண்டே பிடிக்க முடியவில்லை” என்கிற வசனம்   ஒவ்வொரு மனிதர்களுக்கிடையேயான புரிதலை விவரிக்கிறது.
 
ஜிப்ஸி என்றால் என்ன மதம் என்று கேட்கிறான். என்கிற கேள்விக்கு மதம் பிடிக்காத மனித ஜாதி என்று ஜீவா மனிதத்தை பேசுகிறார். இடையில் காதல் அது தோன்றும் இடம் படத்தின் பேசு பொருளாக இருக்கும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.
 
ராஜுமுருகன் ஒரு கம்யூனிச தத்துவவாதி என்பதை உறக்க பேசு என்று ஜீவா சொல்வதில் இருந்து, போராட்டக்களம் , பகத்சிங் ஓவியம் வரை  நீள்கிறது. நல்ல சமூக அரசியல் உரையாடலை “ஜிப்ஸி” துவங்கும் என்றே தோன்றுகிறது.
 

    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்