முகப்புகோலிவுட்

பரபரப்பாக நடந்து வரும் ஜீவாவின் ‘ஜிப்ஸி’ படப்பிடிப்பு

  | June 26, 2018 19:10 IST
Jiiva

துனுக்குகள்

  • ஜீவா கைவசம் 6 படங்கள் உள்ளது
  • இப்படத்தை ‘குக்கூ, ஜோக்கர்’ புகழ் ராஜு முருகன் இயக்குகிறார்
  • மிஸ் இமாச்சல பிரதேஷ் பட்டம் வென்றவர் நடாஷா சிங்
‘கலகலப்பு 2’ படத்திற்கு பிறகு நடிகர் ஜீவா கைவசம் ‘கீ, நெஞ்சமுண்டு நேர்மையுண்டு, கொரில்லா, ஜிப்ஸி, ஸ்வதந்தர்யம் அர்தராத்ரியில் ரீமேக், ராஜசேகர் படம்’ ஆகிய 6 படங்கள் உள்ளது. இதில் ‘ஜிப்ஸி’ படத்தை ‘குக்கூ, ஜோக்கர்’ புகழ் ராஜு முருகன் இயக்குகிறார்.

ஜீவாவுக்கு ஜோடியாக நடாஷா சிங் டூயட் பாடி ஆடி வருகிறார். இவர் மிஸ் இமாச்சல பிரதேஷ் பட்டம் வென்றவர். இதனை ‘ஒலிம்பியா மூவீஸ்’ நிறுவனம் சார்பில் எஸ்.அம்பேத்குமார் தயாரிக்கிறார். சந்தோஷ் நாராயணன் இசையமைக்கும் இதற்கு செல்வகுமார்.எஸ்.கே ஒளிப்பதிவு செய்கிறார், ரேமண்ட் டெரிக் க்ராஸ்டா படத்தொகுப்பாளராக பணியாற்றுகிறார்.

சமீபத்தில், வெளியிடப்பட்ட படத்தின் போஸ்டர்ஸ் ரசிகர்களிடம் செம லைக்ஸ் குவித்து வைரலானது. அதுமட்டுமின்றி, படத்தின் மீதான எதிர்பார்ப்பையும் அதிகரிக்கச் செய்தது. தற்போது, படத்தின் ஷூட்டிங் காரைக்காலில் பரபரப்பாக நடைபெற்று வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்