விளம்பரம்
முகப்புகோலிவுட்

வெங்கட் பிரபு டிவிட்டிய ‘கீ’ டீஸர்

  | October 07, 2017 10:58 IST
Kee Teaser

துனுக்குகள்

  • இயக்குநர் செல்வராகவனின் சீடர் கலீஸ் இப்படத்தை இயக்குகிறார்
  • இதில் நிக்கி கல்ராணி, அனைகா சொட்டி என டபுள் ஹீரோயின்ஸாம்
  • இதன் ஃபர்ஸ்ட் லுக் & மோஷன் போஸ்டரை சிம்பு வெளியிட்டார்
ஐக்கின் ‘சங்கிலி புங்கிலி கதவ தொற’ படத்திற்கு பிறகு ஜீவா நடிப்பில் உருவாகி வரும் படம் ‘கீ’. இப்படத்தை கலீஸ் என்பவர் இயக்கி வருகிறார். இவர் இயக்குநர் செல்வராகவனிடம் உதவி இயக்குநராக பணியாற்றி சினிமா கற்றவராம். இதில் ஜீவாவுக்கு ஜோடியாக நிக்கி கல்ராணி டூயட் பாடி ஆடி வருகிறார். இன்னொரு ஹீரோயினாக ‘காவியத் தலைவன்’ புகழ் அனைகா சொட்டி நடித்து வருகிறார்.

மேலும், ஆர்.ஜே.பாலாஜி, மனோபாலா ஆகியோர் நடிக்கின்றனர். விஷால் சந்திரசேகர் இசையமைத்து வரும் இதற்கு அபிநந்தன் ராமானுஜம் ஒளிப்பதிவு செய்து வருகிறார், நாகூரான் படத்தொகுப்பாளராக பணியாற்றுகிறார். ‘குளோபல் இன்ஃபோடேயின்மெண்ட்’ நிறுவனம் சார்பில் எஸ்.மைக்கேல் ராயப்பன் தயாரித்து வருகிறார். படத்தின் ஷூட்டிங் முடிவடையும் தருவாயில் உள்ளதாம்.
 

சமீபத்தில், நடிகர் ‘யங் சூப்பர் ஸ்டார்’ சிம்பு வெளியிட்ட ஃபர்ஸ்ட் லுக் & மோஷன் போஸ்டர் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது. தற்போது, படத்தின் டீஸரை இயக்குநர் வெங்கட் பிரபு தனது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இந்த டீஸர் ரசிகர்களிடையே செம லைக்ஸ் குவித்து வைரலாகி வருகிறது. அதுமட்டுமின்றி, படத்தின் மீதான எதிர்பார்ப்பையும் அதிகரிக்கச் செய்துள்ளது.

    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்